மு.க.ஸ்டாலினை பதற வைத்த ஒரே ஒரு ஹேஷ்டேக்... போராட்டத்தை நிறுத்திய பின்னணி.!

Published : Nov 07, 2019, 04:17 PM IST
மு.க.ஸ்டாலினை பதற வைத்த ஒரே ஒரு ஹேஷ்டேக்... போராட்டத்தை நிறுத்திய பின்னணி.!

சுருக்கம்

மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக போராட வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு பின்னணியில் ட்விட்டரில் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. 

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ’’மிசா அமலுக்கு இருந்த காலகட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். ஆனால், அடி வாங்கியதை அழுத்தமாக அவர் பதிவு செய்து வருகிறார். ஆனால், எதற்காக அடித்தார்கள்? ஜனநாயகத்துக்கு குரல் கொடுத்ததற்காக அடித்தார்கள் என்று கூறுவது தவறு. அவருடைய தவறான செயல்களுக்காக குறிப்பாக, பாலியல் சார்ந்த பிரச்னைகளில் அவருடைய நிலைப்பாட்டுக்காக அடித்திருக்கலாம் என்று அனைவரும் சொல்கிறார்கள்’’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

#தத்திஸ்டாலின் https://t.co/z8W3lQK4cU

— Mohammed Salman javid (@SalmanJavid) November 7, 2019 />

 

அமைச்சர் பாண்டியராஜனின் இந்த பேசுக்கு திமுக தரப்பில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தியாகம் என்றாலே என்னவென்றே அறியாத ஒரு அரசியல் வியாபாரி மாஃபா பண்டியராஜன் என விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும், திமுக எம்.எல்.ஏவுமான தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் அமைச்சர் பாண்டியராஜன் உடனடியாக தனது பேச்சுக்கு மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் மிசா காலகட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து அவதூறு கருத்துக்களை அமைச்சர் பாண்டிராஜன் பேசியதாக கூறி சென்னை அண்ணா நகரில் திமுகவினர் பாண்டியராஜனின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், அமைச்சர் பாண்டியராஜனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக, ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே வருகிற இன்று திமுக தொண்டர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை திமுக தொண்டர்கள் தவிர்த்து விட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுகவின் தியாக வரலாற்று நினைவுகளை திருத்தி எழுத எத்தனிக்கிறார் அமைச்சர் பாண்டியராஜன். இழிசொற்கள் எங்கிருந்து தோன்றியதோ அந்த இடத்திற்கே போய் சேர்ந்து விடும். தியாகம் செய்து அரசியலுக்கு வந்தவர்கள், மக்கள் தரும் பதவி, பொறுப்புகளை உணர்ந்தவர்களுக்கே தியாகத்தை பற்றி தெரியும். பாண்டிராஜன் எதைக்கற்றார், எதி புரிந்து கொண்டார் என்பதை அவரது பேச்சுகள் காட்டிவிட்டன’’ என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 

மு.க.ஸ்டாலின் பதறியடித்து இப்படி போராட்டத்தை நிறுத்தச் சொன்னதற்கு காரணம், மாஃபா பாண்டியராஜுக்கு ஆதரவாகவும், மு.க.ஸ்டாலினை எதிர்த்தும் #தத்திஸ்டாலின் என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி விட்டனர். இதனால் பதறிப்போன ஸ்டாலின் வாழ்க வசவாளர் எனக் கூறி போராட்டத்தை நிறுத்த வேண்டுகோள் விடுத்துள்ளார் எனக் கூறுகிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!