தமிழிசை சவுந்தரராஜன் எடுத்த திடீர் அதிரடி முடிவு... அலறும் தெலுங்கானா..!

By Thiraviaraj RMFirst Published Sep 17, 2019, 1:27 PM IST
Highlights

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 
 

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 

மாநில ஆளுநர்கள் ஆட்சி தொடர்பான வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ மக்களை சந்தித்து குறைகளை கேட்பதோ நடைமுறையில் இல்லை. இதற்கு விதிவிலக்காக  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி போன்றோர் நேரடி ஆய்வு பணிகளை மேற்கொண்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 

அந்த வரிசையில் இப்போது  தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்துள்ளது தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழிசையில் ட்விட்டர் பக்கத்தில் தெலுங்கானாவை சேர்ந்த மஜ்லிஸ் பச்சோ தெக்ரிக் அமைப்பின் தலைவர் ஒரு கருத்தை அனுப்பி இருந்தார். அதில், நீங்கள் வாரம் ஒரு தடவை மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும்’எனக் கூறி இருந்தார். 

அதற்கு பதிலளித்த தமிழிசை ’’உங்களுடைய ஆலோசனைக்கு நன்றி. எனக்கும் இதுபோன்ற எண்ணம் உள்ளது’’என்று கூறி இருந்தார். அவர் மக்களை நேரடியாக சந்திப்பேன் என்று கூறிய இந்த கருத்து ஆளுநரின் அதிகாரத்தை மீறும் செயல் என்று பலரும்  விமர்சித்து வருகின்றனர். அதில் ஒருவர் பாஜகவை தெலுங்கானாவில் வளர்ப்பதற்காக மாநில அரசுக்கு இணையாக மற்றொரு அரசை நீங்கள் நடத்தப்போகிறீர்களா? என்று கேட்டுள்ளார்.

மற்றொருவர் குறிப்பிட்டுள்ள கருத்தில் நீங்கள் மக்கள் பிரதிநிதி அல்ல. அரசியல் அமைப்பு பதவியாக நீங்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறீர்கள். உங்களுடைய பணிகள் அரசியல் சாசன சட்டப்படி குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறி உள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைமை நேரடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

click me!