இனிமேல் டீச்சர்ஸ் ஏமாத்த முடியாது … ஸ்கூலுக்கு வந்ததும் செல்பி எடுத்து அனுப்ப வேண்டும் ! முதலமைச்சர் அதிரடி உத்தரவு !!

By Selvanayagam PFirst Published Jul 10, 2019, 8:33 PM IST
Highlights

உத்தரபிரதேச மாநிலத்தில் காலையில்  ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தவுடன் செல்பி எடுத்து தங்களது மேலதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்  என அம்மாநில அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் அரசு ஊழியர்களை ஒழுங்குப்படுத்த பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக உடல் தகுதிப் பெறாத 50 வயது நிரம்பிய சில காவலர்களை விருப்ப ஓய்வில் அனுப்பினார். 

இதனையடுத்து ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவது, பணிக்கு வராமலே சம்பளம் வாங்குவது போன்ற முறைகேடுகளை தடுக்க புதிய முறையை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, ஆசிரியர்கள் காலை 8 மணிக்கு பள்ளிக்கு வருவதை உறுதி செய்யும் விதமாக தங்கள் வகுப்பறையின் முன் நின்று செல்பி எடுத்து அதனை பேசிக் சிஷா இணையத்தளப் பக்கத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள்  அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் அப்படி செய்யவில்லை  என்றால், அந்த குறிப்பிட்ட ஆசிரியரின் ஒரு நாள் ஊதியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை முதன்முறையாக உத்தரபிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில் அறிமுகமாகியுள்ளது.

மேலும் முழு மாநிலத்திற்கும் நடைமுறைக்கு விரைவில் வரும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடைமுறைக்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நகரங்களில் போக்குவரத்து ஈசியாக கிடைக்கிறது. ஆனால். கிராமங்களில் பொது போக்குவரத்து அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை என சில ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.. 

மோசமான நெட்வொர்க் மற்றும் செல்போனில் டேட்டா இல்லாதது போன்றவற்றால்கூட பாதிப்புகள் ஏற்படும். ஒருநாள் ஆசிரியர் ஒருவர் வந்த டெம்போ, ரெயில்வே கிராசிங்கில் மாட்டிக் கொண்டது. இதனால் தாமதமாக வர நேரிட்டது. ஆனாலும் அன்னைய ஒரு நாள் சம்பளம் அவருக்கு வழங்கப்படவில்லை. இது போன்ற சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

click me!