பள்ளிக்கூடம் வர ஆசிரியர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.. மாணவர்களின் உயிர்தான் முக்கியம்.. ஜாக்டோ ஜியோ.

Published : Aug 04, 2021, 08:18 AM IST
பள்ளிக்கூடம் வர ஆசிரியர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.. மாணவர்களின் உயிர்தான் முக்கியம்..  ஜாக்டோ ஜியோ.

சுருக்கம்

பெருந்தொற்று காலத்தில் படிப்பை விட  மாணவர்களின் விலைமதிப்பில்லாத உயிர்கள் மட்டுமே முக்கியம் எனவே தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் அவர் கூறினார்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு எந்த தயக்கமும் காட்டவில்லை எனவும், மாணவர்களின் உயிர் ஒன்றே முக்கியம் என ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் முதலமைச்சரின்  கொரோனா  நிவாரண நிதியாக ஒரு கோடியே 50 லட்சத்து 30 ஆயிரத்து 127 ரூபாய்க்கான காசோலையை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சந்தித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  ஜாக்டோ-ஜியோ  ஒருங்கினைப்பாளரும்,  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க செயலாளருமான தியாகராஜன். கொரோனா 2ம் அலையால் தமிழகத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,  தமிழக அரசின் சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக  மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், இதற்கு உறுதுணையாக இருக்கும் வகையில்  ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பிலும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பிலும் முதலமைச்சர் நிவாரண நிதி ஒரு கோடியே 50 லட்சத்தி முப்பதாயிரத்து 127 ரூபாய்க்கான காசோலையை முதல்வரிடம்  வழங்கியுள்ளதாக கூறிய அவர், ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு தயாராக உள்ளதாகவும், ஆசிரியர்கள் பள்ளிக்குப் வருவதில் எந்த தயக்கமும் காட்டவில்லை என்றும் குறிப்பிட்டார்.

பெருந்தொற்று காலத்தில் படிப்பை விட  மாணவர்களின் விலைமதிப்பில்லாத உயிர்கள் மட்டுமே முக்கியம் எனவே தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் அவர் கூறினார். ஆன்லைன் கல்வி முறையில் முறைகேடுகள் நடந்திருப்பது உண்மைதான் என்றும்,அதை தடுப்பதற்கான  நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும், ஆன்லைன் கல்வி முறையை ஒழுங்குபடுத்த இதற்காக தமிழக அரசின் சார்பில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்ட அவர், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!