கொரோனாவுக்கு மருந்து... மக்களை குழப்பும் போலி மருத்துவர்கள்..!! நடவடிக்கை எடுக்க கோரும் ஆசிரியர்கள் சங்கம்..

By Ezhilarasan BabuFirst Published Mar 31, 2020, 9:52 AM IST
Highlights

மேலும் சித்தமருத்துவத்தில் அவர் பதிவுசெய்யவில்லை  என்ற தகவலும் பரவிவருகிறது. மத்திய-மாநில அரசுகள் முழுமூச்சாக கொரோனா பரவலில் செயல்பட்டுவருகிறது

கொரோனா வைரஸ் வைகமாக பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் மக்களை குழப்பும் போலீ மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதே கோரிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அதன் விவரம் :-  உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலால் இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்,  22 பேரை அது  பலிவாங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 67 பேரையும் கொரோனா தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் மரபுவழி சித்தமருத்துவர் என்ற பெயரில் திருத்தணிகாச்சலம் என்பவர் வெளிநாடுகளுக்குச்சென்று அங்கு நான் அளித்த மருந்தை ஏற்று குணமடைந்து வருகிறார்கள் என்று வாட்ஸ் அப் பேஸ்புக்கில் பரப்பிவருகிறார். 

சித்தமருத்தில் உண்மையாகவே வைரஸ் குணமாகிறதா?  ஏன் அரசு பயன்படுத்த மறுக்கிறது போன்ற கேள்விகள் எழமால் இல்லை. இம்மாதம் வெளிநாட்டிற்கு சென்று பத்திரிகையாளரை சந்தித்து சித்தமருத்துவத்தால் குணமாக்கமுடியும் என்கிறார். வெளிநாட்டிற்கு சென்றுவந்த சித்தமருத்துவர்  திருத்தணிகாச்சலம் தனிமைப்படுத்தப் பட்டுள்ளாரா.?  என்ற தகவல் இல்லை. உண்மையாகவே வெளிநாட்டிற்கு சென்றுவந்தாரா என்பதில் தெளிவில்லை. மேலும் சித்தமருத்துவத்தில் அவர் பதிவுசெய்யவில்லை  என்ற தகவலும் பரவிவருகிறது. மத்திய-மாநில அரசுகள் முழுமூச்சாக கொரோனா பரவலில் செயல்பட்டுவருகிறது.  

லட்சக்கணக்கான உயரதிகாரிகள் மருத்துவர்கள் முதல் தூய்மைப்பணியாளர்கள் வரை தன்னலமின்றி பணியாற்றிவரும் சூழலில் கொரோனாவிற்கான. மருந்து இன்னும்  கண்டுபிடிக்க வில்லை என்பதே நிலவரம். ஆனால் கொரோனாவிலிருந்து காப்பாற்றுவதற்கு நான் மருந்து கண்டுபிடித்திருக்கிறேன் என்கிறார். அரசு உண்மைத் தன்மையை ஆராய்ந்து முடிவெடுக்கவேண்டும் இதுபோன்ற செய்திகள் வருவதால் கிராமப்புறத்தைச் சார்ந்த ஏழை எளிய மக்கள்  மட்டுமின்றி படித்தவர்களையும் அவர் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறார்.  இதுபோன்ற பேரிடர் காலத்தில் கொத்து கொத்தாக மக்கள் சரிந்து உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் அரசு  நடவடிக்கை எடுத்து தீர்வுகண்டிட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகிறோம் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

 

click me!