இனி நடக்கப்போற தரமான சம்பவத்த மட்டும் பாருங்க... செங்கோட்டையன் எடுத்த அதிரடி முடிவு!

By vinoth kumarFirst Published Jan 26, 2019, 11:37 AM IST
Highlights

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தன்றும், பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, பொறுத்திருத்து பாருங்கள் என்று கூறினார்.

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தன்றும், பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, பொறுத்திருத்து பாருங்கள் என்று கூறினார்.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், பல மாவட்டங்களில் அரசு பள்ளிகள் நான்கு நாட்களாக செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் பிடிக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும், எச்சரிக்கையை மீறி போராட்டம் நடந்து வருகிறது. 

ஆசிரியர்கள் பணிக்கு வராவிட்டால், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அடுத்தக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இந்த மிரட்டலையும் ஆசிரியர்கள் கண்டுகொள்ளவில்லை. நீதிமன்றமும் தலைமையிட முடியாது என கைவிரித்தது. 

இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் அரசுப்பள்ளிகளை மூட இருப்பதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினரிடம் சிலர் தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.

தமிழக அரசுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். குடியரசு தினத்தன்றும், பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, பொறுத்திருத்து பாருங்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

click me!