
கொரோனா பரவலால் 2 வார ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக 2,900 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
24ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ளது. இந்த ஊரடங்கு அடுத்தும் தொடருமா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆகையால் டாஸ்மாக் கடைகள் அப்போதும் மூடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. டாஸ்மாக் கடைகள் மூடிக்கிடப்பதால் அரசு கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. டாஸ்மாக்கை திறக்கப் போவதாகவும், விடிகாலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திறந்திருக்கும் என்றும் அரசு தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
அதுமட்டுமின்றி, டோர் டெலிவரி மூலம் வீட்டுக்கே வந்து சரக்கை டெலிவரி செய்ய இருப்பதாகவும் தகவல் வந்திருக்கிறது. இந்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. அரசின் இந்த முடிவில் மாற்றமும் இருக்கலாம்.