#BREAKING கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.50,000 நிதியுதவி.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published May 18, 2021, 5:27 PM IST
Highlights

டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா 2வது அலை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இதில், கொரோனா தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. இன்றைய நிலவரப்படி அம்மாநிலத்தில் 22,111 பேர் உயிரிழந்துள்ளனர். 50,863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்;-  டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். குடும்பத்தில், பணம் சம்பாதிப்பவர்கள் உயிரிழந்திருந்தால், அவர்களின் குடும்பத்திற்கு மாதம் ரூ.2,500 பென்சன் மற்றும் இழப்பீடும் வழங்கப்படும். கணவர் உயிரிழந்திருந்தால், மனைவிக்கும், மனைவி உயிரிழந்திருந்தால் கணவருக்கும் வழங்கப்படும். திருமணமாகாத நபர் உயிரிழந்திருந்தால், அவர்களின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்கப்படும்.

கொரோனாவினால், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும். அக்குழந்தைகள் 25 வயதாகும் வரை இந்த நிதி வழங்கப்படும். அத்துடன் இலவச கல்வியும் வழங்கப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா பாதிப்பால் இதுவரை 22,111 பேர் உயிரிழந்துள்ள நிலையில் நிவாரணத்தை முதல்வர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!