ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது..!! குடிமகன்களுக்கு இடியாக வந்த தகவல்.!!

By Ezhilarasan BabuFirst Published Apr 7, 2020, 2:35 PM IST
Highlights

சிலர்  வேதிப்பொருட்களை அருந்தி உயிரிழந்துள்ளனர் .  அதேபோல் கடைகள் பூட்டப்பட்டு உள்ளதால் சிலர் கடைகளின் பூட்டை உடைத்து திருட முயற்சித்து வருகின்றனர் . 
 

ஊரடங்கும் முடியும்வரை டாஸ்மாக் கடைகளை  திறக்கும் எண்ணமில்லை என அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ,  கொரோனா எதிரோலியாக  ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார் .  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  இந்நிலையில் தமிழகத்தில்  நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது இந்நிலையில் தமிழக அரசு தீவிரமாக  ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வருகிறது . இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது இந் நிலையில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் குடிமகன்கள் காத்திருக்கின்றனர். 

 இந்நிலையில்  செய்தியாளர்களை  சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஊரடங்கும் முடியும்வரை டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படாது என தெரிவித்துள்ளார் .  டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபானக் கடைகள் மற்றும்  மதுபானக்  கூடங்கள் கடந்த மார்ச்- 24 ஆம் தேதி மூடப்பட்டது ,  இதனால் மதுபானம் அருந்துவோர் மிகுந்த கவலை அடைந்தனர் ,  சிலர் மதுவுக்கு பதிலாற பல மாற்று வழிகளை கையாண்டு வருகின்றனர், சிலர்  வேதிப்பொருட்களை அருந்தி உயிரிழந்துள்ளனர் .  அதேபோல் கடைகள் பூட்டப்பட்டு உள்ளதால் சிலர் கடைகளின் பூட்டை உடைத்து திருட முயற்சித்து வருகின்றனர் . 

இந்நிலையில் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி,  ஊரடங்கும் முடியும் வரை கடைகளை திறக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என தெரிவித்துள்ளார் .  அதேபோல் மது இல்லாமல் அவதிப்படும் குடி நோயாளிகளுக்கு கவுன்சிலிங் வழங்க அரசு மருத்துமனைகளில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் . இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு தொடருமா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் ,   ஊரடங்கு உத்தரவு தொடருமா என்பது பற்றி பிரதமரும் முதல்வரும் முடிவு எடுப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார் .

 

click me!