நாளை டாஸ்மாக் கடை திறப்பு... குடிமகன்களுக்கு சரக்கு தடையின்றி கிடைக்க சிறப்பு ஏற்பாடுகள்..!

By vinoth kumarFirst Published May 15, 2020, 6:17 PM IST
Highlights

கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளை தவிர பிற இடங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளை தவிர பிற இடங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகள், கடந்த 7ம் தேதி திறக்கப்பட்டு 2 நாட்கள் மது விற்பனை நடைபெற்றது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூடும்படி உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மதிமுக, பாமக, மக்கள் நீதி மய்யம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் டாஸ்மாக் தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், கடைகளை மூடும்படி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்க டாஸ்மாக் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த முறை இந்த முறை எந்த தவறும் நடந்துவிடக்கூடாது என்பதில் தமிழகம் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. உச்சநீதிமன்ற விதிகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 550 பேர் மட்டுமே வரிசையில் நிற்கவேண்டும் மற்றவர்களுக்கு டோக்கன் வழங்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளது. 

உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின் படி சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுவதில் எந்த சமரசமும் காட்டக்கூடாது என்ற கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது. டோக்கன் வழங்குவதற்கு தனியாக இடம் அமைக்கப்பட வேண்டும். மது விநியோக கவுண்டர்கள் அதிகரிக்க செய்ய வேண்டும் எனவும், தமிழக டிஜிபி அனைத்து மாவட்ட காவல் காண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார். 

ஏற்கனவே கடந்த முறை டாஸ்மாக் திறக்கப்பட்ட போது வயது வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டது. அதேபோல், ஒவ்வொரு டாஸ்டாக் கடைக்கும் 2 காவலர்கள், 2 தன்னார்வலர்கள் பணியமர்த்தப்படுவார்கள். அவர் வரக்கூடிய குடிமகன்களிடம் சமூக இடைவெளியை பின்பற்றுவது தொடர்பாக அனைத்து நடைமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை வழங்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

click me!