கொடுப்பது போல் கொடுத்து பிடுங்கி கொள்ளவதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டாலினை சகட்டு மேனிக்கு விமர்சிக்கும் TTV..!

By vinoth kumarFirst Published Jun 12, 2021, 1:55 PM IST
Highlights

இதன் மூலம் முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய அரசுக்கும் மக்களின் உயிரைப் பற்றி துளியும் அக்கறை இல்லை என்பதும், 'யார் எப்படி போனாலும் தங்கள் கஜானா நிரம்பினால் போதும்' என்று நடந்து கொள்வதும் மிகமோசமான செயல்பாடாகும். 

ஒரு பக்கம் நிவாரணத் தொகை கொடுப்பது போல் கொடுத்து, அதனை டாஸ்மாக் வழியாக பிடுங்கிக் கொள்ளும் தந்திரத்தையே, இவர்களும் பின்பற்றுவது பெரும் அவலமாகும் என டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

வரும் ஜூன் 14ஆம் தேதியுடன் அமலில் உள்ள ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீக்கப்படுவதாக நேற்று மாலை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார். அதில் நோய்த்தொற்று அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களை தவிர, மற்ற 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது.

அதன்படி சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பியூட்டி பார்லர்கள், சலூன்கள், பூங்காக்கள் ஆகியவை திறக்க அனுமதிக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக ஜூன் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அரசின் இந்த முடிவுக்குக் பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்து வருகின்றது. 

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக்  காப்பாற்றுவதற்காக என்று கூறி மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்துள்ள முதலமைச்சர், அதற்கு நேர்மாறாக நோய்தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இதன் மூலம் முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய அரசுக்கும் மக்களின் உயிரைப் பற்றி துளியும் அக்கறை இல்லை என்பதும், 'யார் எப்படி போனாலும் தங்கள் கஜானா நிரம்பினால் போதும்' என்று நடந்து கொள்வதும் மிகமோசமான செயல்பாடாகும். ஒரு பக்கம் நிவாரணத் தொகை கொடுப்பது போல் கொடுத்து, அதனை டாஸ்மாக் வழியாக பிடுங்கிக் கொள்ளும் தந்திரத்தையே, இவர்களும் பின்பற்றுவது பெரும் அவலமாகும். 

எனவே, கொரோனா நோய் தொற்றும் மையங்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ள டாஸ்மாக் கடைகளை திறக்கும் அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

click me!