பெண்களிடமிருந்து குவியும் கடிதங்கள்..! டாஸ்மாக் ஹீரோவாக உருமாறிய அமைச்சர்..!

By Asianet TamilFirst Published May 13, 2019, 4:13 PM IST
Highlights

தமிழகத்தில் சாராயக் கடைகளுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் மிகப்பெரிய  பிரச்சனையாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை சில சமயங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்களே அந்த மாவட்டத்தின் கலெக்டரிடம் சொல்லி மூட உத்தரவிடுகிறார்கள். 

தமிழகத்தில் சாராயக் கடைகளுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் மிகப்பெரிய  பிரச்சனையாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை சில சமயங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்களே அந்த மாவட்டத்தின் கலெக்டரிடம் சொல்லி மூட உத்தரவிடுகிறார்கள். 

இப்படி  டாஸ்மாக் கடை மூடச்சொல்லும் சம்பவத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் டி.வி விவாத நிகழ்ச்சில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்ற  போது நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள் "திராவிட கட்சிகள்தான் தமிழகத்தை மதுவால் சீரழித்தார்கள். அதிலும் அமைச்சர் இருக்க கூடிய விருதுநகர் மாவட்டத்திலே கல்விக்கண் திறந்த காமராசர் சிலைக்கு அருகிலே மதுக்கடையை வைத்து அவரை அவமானப்படுத்தியது மட்டுமல்லாமல், அருகிலிருக்கும் மக்களையும் துன்பத்திற்கு ஆளாக்குகிறார்கள்" என  சொன்னார். 

இதை அருகில் இருந்து கேட்ட  விருதுநகர் அ.தி.மு.க மாவட்ட செயலாளரும்,பால் வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி மறுநாளே விருதுநகர் அல்லம்பட்டியில் இயங்கிவரும் அந்த டாஸ்மாக் கடையை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானத்திடம் சொல்லி மூட உத்தரவிட்டார். அமைச்சரின் இப்படிப்பட்ட நடவடிக்கை டாஸ்மாக் வருமானத்தை வைத்து கொண்டு அரசானது நிர்வாகம் நடத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்கு மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. 

இதற்கிடையில் பெண்களிடம் இருந்தும் கடிதங்கள் பால்வளத்துறை அமைச்சருக்கு வீட்டு கதவை கொண்டிருக்கிறது. அதில் "அமைச்சரே எங்க பகுதியிலும் இந்த மாதிரியான டாஸ்மாக் உள்ளது அதையும் அகற்ற நடவடிக்கை எடுங்க" என இருக்கிறது. இதையெல்லாம் படித்த அமைச்சர் கே.டி.ஆர் இதையெல்லாம் அல்லம்பட்டியில் மூடிய டாஸ்மாக் போல எப்படி இதை டீல் செய்வது என யோசித்ததோடு பெண்கள் கடிதத்தில் சொல்லும் பிரச்சனையான மதுக்கடைகளை மாவட்ட ஆட்சியர் சிவஞானத்திடம் பேச இருக்கிறாராம்.

click me!