இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு ‘கடை’ இல்லை பாஸ்...

By Muthurama LingamFirst Published May 17, 2019, 3:33 PM IST
Highlights

தமிழகத்தில் இடைத்தேர்தல் மற்றும் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, டாஸ்மாக் கடைகளை மூட  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். நேற்று ஸ்டாக் வாங்கி வைக்காதவர்கள் நெஞ்சைப்பிடிக்கவேண்டாம் இது ஜஸ்ட் இடைத்தேர்தல் நடக்கும் அந்த 4 தொகுதிகளுக்கு மட்டுமான அறிவிப்பே.

அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதே நாளில், தமிழகத்தில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படவுள்ளது. 

இதையடுத்து, 4 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள 13 வாக்குச்சாவடிகள் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இன்று மாலை முதல் மே 19 -ஆம் தேதி இரவு வரை, மூன்று தினங்களுக்கு இப்பகுதிகளில் டாஸ்மாக்  கடைகள் இயங்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஓட்டுக்காக வாங்கிய பணத்தை ஸ்டாக் வைப்பதற்காக மட்டுமே செலவழிக்கவேண்டியுள்ளதே என்று குடிமகன்கள் புலம்புகின்றனர். 

click me!