2024 லோக்சபா தேர்தலுக்கு டார்கெட்... 140 இடங்களுக்கு குறி.. தொண்டனை மதியுங்கள் , அமித் ஷா அட்வைஸ்

By Ezhilarasan BabuFirst Published Sep 7, 2022, 5:36 PM IST
Highlights

எதிர்வரும்  2024  மக்களவைத் தேர்தலில் கடந்த தேர்தலில் 144 இடங்களுக்கு பாஜக குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டும் இடமின்றி கடந்த தேர்தல்களில் தோல்வியுற்ற இடங்கள் அனைத்தையும் கைப்பற்ற வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்
.

எதிர்வரும்  2024  மக்களவைத் தேர்தலில் கடந்த தேர்தலில் 144 இடங்களுக்கு பாஜக குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டும் இடமின்றி கடந்த தேர்தல்களில் தோல்வியுற்ற இடங்கள் அனைத்தையும் கைப்பற்ற வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே உள்ளது, பல்வேறு அரசியல் கட்சிகளும் அதற்கான வியூகம் வகுக்க தொடங்கியுள்ளன. 

ஒருபுறம் தேச ஒற்றுமை பேரணியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார், மறுபுறம் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு பாஜக ஆயத்தமாகி வருகிறது, அதற்கான பணிகளை பாஜக தொடங்கி உள்ளது என்றே சொல்லலாம், இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ( செப்டம்பர் 6 ) டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வியூக கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவர் ஜேபி நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கட்சி தோல்வி அடைந்த இடங்களை எதிர்வரும் தேர்தலில் கைப்பற்றியே ஆகவேண்டும் என அமித்ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். கடந்த முறை பெற்றதை விட அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என அவர் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு  தோல்வி அடைந்த இடங்களில் 30 சதவீத இடங்களை 2019 லோக்சபா தேர்தலில் பாஜக கைப்பற்றியது, அதேபோல் 2019இல் பாஜக தோல்வியடைந்த இடங்களை வரும் 2024 லோக்சபா தேர்தலில் கைப்பற்ற வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு தேர்தலில் 144 இடங்களில் பாஜக தோல்வியடைந்தது. அந்த இடங்களை கைப்பற்ற வேண்டும் என அமித்ஷா அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இழந்த இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்றும், ஒவ்வொரு அமைச்சர்களும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 144 இடங்களுக்கும் அமைச்சர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைப்புகளுக்கு தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், கட்சித் தொண்டர்களுக்கு மரியாதை கொடுங்கள், பிரதமர் மோடியின் பெயரை முன்னெடுத்துச் செல்லுங்கள், அப்போது அனேக இடங்களில் மக்கள் பாஜகவை ஆதரிப்பார்கள், அமைச்சர்கள் களத்தில் இறங்கி வேலை செய்யவேண்டும் என அமித்ஷா அமைச்சர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். 
 

click me!