மத சர்ச்சையை ஏற்படுத்திய தனிஷ்க் விளம்பரம்... நகைக்கடை மீது தாக்குதல்..!

By Thiraviaraj RMFirst Published Oct 14, 2020, 1:59 PM IST
Highlights

பிரபல டைட்டன் குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் நகை நிறுவனத்தின் மதம் சார்ந்த சர்ச்சை விளம்பரம் ஒன்று, சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறி உள்ளது. 

பிரபல டைட்டன் குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் நகை நிறுவனத்தின் மதம் சார்ந்த சர்ச்சை விளம்பரம் ஒன்று, சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறி உள்ளது. 

இந்து மதத்தைச் சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அவரின் மாமியார் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவது போன்ற விளம்பரம் ஒன்றை கடந்த வாரம் தனிஷ்க் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.  இது லவ் ஜிஹாத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக கூறி, பலரும் எதிர்ப்பு தெரிவித்ததாலும் டுவிட்டரில்  டிரெண்ட் ஆனது. இந்த விளம்பரத்தை யூடியூப்பில் இருந்து தனிஷ்க் நிறுவனம் நீக்கியது.

இந்த நிலையில், இந்து-முஸ்லீம் ஒற்றுமையை விளக்கும் வகையிலான விளம்பரத்தை நீக்கியதற்காக எம்.பி. சசி தரூர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விளம்பரம் தற்போது விவாதப்பொருளாக மாறி உள்ளது.

இந்த நிலையில் இந்த் விவகாரம் தொடர்பாக குஜராத்தில் உள்ள தனிஷ்க் கடையில் மர்ம கும்பல் ஒன்று  தாக்குதல் நடத்தி உள்ளது. கடையின்  மேலாளரை கும்பல் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்குமாறு கூறி உள்ளது. "மதச்சார்பற்ற விளம்பரத்தை ஒளிபரப்பியதன் மூலம் இந்துக்களின் உணர்வை புண்படுத்தியதற்காக கட்ச் மாவட்ட மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்  என மேலாளர் மன்னிப்புக் கடிதத்தில் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது.

click me!