மழலையர் வகுப்புகளுக்கு லீவு விடுங்க ... கொரோனா அச்சத்தில் அரசை எச்சரிக்கும் ஆசிரியர்கள்..!!

Published : Mar 14, 2020, 12:54 PM IST
மழலையர் வகுப்புகளுக்கு லீவு விடுங்க ... கொரோனா அச்சத்தில் அரசை எச்சரிக்கும் ஆசிரியர்கள்..!!

சுருக்கம்

பலமுறை விழிப்புணர்வு குறித்து குழந்தைகளிடம் சொன்னாலும் பின்பற்றுவது இயலாதகாரியமாக உள்ளது.  

கொரொனா வைரஸ் பரவுவாதால்  மாணவர்கள் பாதுகாப்பினை கருதி மழலையர் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மார்ச்- 1 ஆம் தேதி  வரை விடுமுறை அளிக்க வேண்டும் என அரசுக்கு  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது .  இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள் அறிக்கையின் முழு விவரம் :- சீனா நாட்டில் தொடங்கி இத்தாலி, ஈரான்  உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் விஸ்வரூபமெடுத்து தற்போது இந்தியாவிலும்  பரவி 83 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள்  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பில்லையென்றாலும், பக்கத்து மாநிலங்களில் கேரளா,கர்நாடகா பாதிப்பு பரவலாகி வருவதால் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 

இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக  மாணவர்கள் நலன்கருதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பினைத் தவிர்த்து மற்றவகுப்பு மாணவர்களுக்கு தேர்வினை ரத்துசெய்து விடுமுறை அளிக்க ஆவனச்செய்ய வேண்டுகிறோம்.  மேலும் கர்நாடகா, டெல்லியில் கொரோனா வைரசால் இருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டு வருவது வரவேற்புக்குரியது.  அதேவேளையில் குழந்தைகள் விழிப்புணர்வை கடைபிடிப்பது சிரமங்கள் உள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக. கேரளா கர்நாடகா உள்ளிட்ட 8  மாநிலங்களுக்கு தொடக்க நடுநிலை மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே குழந்தைகளின் நலன்கருதியும் தற்போது சளி இருமல் தும்மல் போன்றவை அதிகரித்து வருவதால்  வைரஸ்  குழந்தைகளுக்கு பரவாமல் தடுக்கும் நோக்கத்தோடு  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருமுன் காத்திடும் நோக்கில்  எல்கே.ஜி , மழலையர் வகுப்புகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அளித்தும் , 

கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்கள் கன்னியகுமரி ,  நெல்லை ,  தென்காசி ,  உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு மட்டும் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது  தற்போது நிறுத்திவைக்கப்பட்டிருப்பது பெற்றோர்கள் மத்தியில் குழப்பமுமம் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது...  அதேவேளையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலமுறை விழிப்புணர்வு குறித்து குழந்தைகளிடம் சொன்னாலும் பின்பற்றுவது இயலாதகாரியமாக உள்ளது.  கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுவதால் எளிதில் பரவும் அபாயம் உள்ளது. ஆகையால் குழந்தைகளின் உடல் நலன்கருதி மாநிலம் முழுதும் Pre-KG முதல்  8 ஆம்  வகுப்பு வரை மார்ச் 31வரை விடுமுறை வழங்க ஆவனசெய்யும்படி மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களை  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது. 

 

 

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!