பாஜக- அதிமுகவுக்கு எதிராக சீண்டல்... ரஜினிக்கு நன்றி சொன்ன திமுக எம்.பி..!

Published : Mar 14, 2020, 12:37 PM IST
பாஜக- அதிமுகவுக்கு எதிராக சீண்டல்... ரஜினிக்கு நன்றி சொன்ன திமுக எம்.பி..!

சுருக்கம்

நடிகர் ரஜினிகாந்துக்கு தருமபுரி தொகுதி திமுக எம்.பி., செந்தில்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.  

நடிகர் ரஜினிகாந்துக்கு தருமபுரி தொகுதி திமுக எம்.பி., செந்தில்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த  ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி’’ என ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள திமுக எம்.பி செந்தில்குமார், ‘’சூப்பர் ரஜினிகாந்த் சார், மத்திய பாஜக அரசு மற்றும் மாநில அதிமுக அரசுகளை மாற்ற வேண்டும் என்று நீங்கள் வெளிப்படையாக கோரியதற்கு எனது நன்றி எனத் தெரிவித்துள்ளார். ஆனால், ரஜினிகாந்த் பாஜக- அதிமுக என குறிப்பிடவில்லை.

இந்தப் பதிவிற்கு கருத்து தெரிவித்துள்ள சிலர், ‘’லீலா பேலஸ்ல அவர் ஸ்டாலினை பத்தி பேசும்போதே தெரிஞ்சிக்க வேண்டாம் அது வஞ்சப்புகழ்ச்சின்னு அவரோட முதல் ஸ்கெட்ச்சே திருட்டு திமுகவுக்கு சமாதி கட்டுறது தான். கோபாலபுரத்து குடும்பத்தையும், திமுக - அதிமுக குறுநில மன்னர்களையும் அழிக்காம இந்த போர் ஓயாது’’ எனத் தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!