பத்தாம் வகுப்பு தேர்வு எப்போது..?? ஆசிரியர்கள் சங்கம் வைத்த அதிரடி கோரிக்கைகள்..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 18, 2020, 3:06 PM IST
Highlights

தேர்வு நடத்துவதாக முடிவெடுத்தால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் 10 நாட்களாவது பள்ளிக்குவந்து பயிற்சி எடுத்தால் மட்டுமே தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதுவார்கள்.

நாடும் முழுவதும் கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில் இந்தியாவில் 14 ஆயிரத்து 378 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில்  480 பேர் உயிரிழந்துள்ளனர் அதேபோல் இந்த வைரஸ் தமிழகத்திலும் வேகமெடுக்க தொடங்கியுள்ளதால்,   தமிழகத்தில் சுமார் 1, 323 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரையில் தமிழகத்தில் சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளனர் . தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது , இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்து விதமான தொழிலாளர்களும் வீடுகளில் முடங்கியுள்ளனர். குறிப்பாக மாணவர்கள் இந்த வைரசால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.  

10 மற்றும் 12 ஆம் வகுப்பு  மாணவர்கள் ஒருபுறம் வைரஸ் அச்சத்தில் மூழ்கியுள்ள நிலையில்,   மறுபுறம் பொது தேர்வு தொடர்பான கவலையில் ஆழ்ந்துள்ளனர் .  பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களில் சுமார் 34 ஆயிரம் பேர் கடைசியாக நடந்த தேர்வை எழுதாமல் தவிர்த்துள்ளதால்,  மீண்டும்  தங்களுக்கு தேர்வு நடத்தப்படுமா என்ற  எதிர்பார்ப்பில் காத்துள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு  நிச்சயம் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதால்,கொரோனா வைரஸ் தொற்றுக்கு  மத்தியல் எப்படி தேர்வு எதிர்கொள்வது என்ற அச்சத்தில் அவர்கள் மூழ்கி உள்ளனர்.   அதே நேரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பத்தாவது மாணவர்களுக்கான தேர்வை ஒத்திப் போட வேண்டும் ,  அல்லது அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என அரசுக்கு பல்வேறு  ஆலோசனைகளை வழங்கிவருகின்றனர்.

 

அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் 12  ஆம் வகுப்புக்கான  விடைத்தாள்களை ஆன்லைனில்   திருத்தும்  வகையில் ஏற்பாடு செய்யது தர வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால்  அப்படி செய்ய இயலாவிட்டால் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி சில சலுகைகளை செய்து தர வேண்டும் என  அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் இதுகுறித்து அவர்கள் வைத்துள்ள கோரிக்கையின் விவரம் : -  ஆன்லைன் மூலம் 12 ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்திட ஏதுவாக ,  விடைத்தாள்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு இல்லாதபட்சத்தில்  தற்போதுள்ள போக்குவரத்து வசதியின்மையை கருத்தில் கொண்டும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள  ஆசிரியர்களுக்கு வசதியாக அந்தந்த மாவட்டங்களிலையே திருத்தும் மையங்களை அதிக அளவில் அமைத்து வினாத்தாள்கள் திருத்த ஏற்பாடு செய்ய வேண்டும்  இதுவரை ஒரே மையத்தில் நூற்றுகணக்கான ஆசிரியர்கள் எல்லா பாடத்திற்காகவும் திருத்துவதால் கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. 

தற்போது பேரிடர் காலத்தில் அசெளகரியமும் சமூக விலகலாகவும் கடைபிடிக்கும் வகையில் ,  இம்முறை 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்கள் பாட வாரியாக அமைந்திட்டால் பாதுகாப்பாகவும் விரைவாகவும் திருத்த முடியும்.   விடைத்தாள் திருத்தும் மையங்களை அதிகரித்து ஆசிரியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவேண்டும்.  மேலும் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்தில் பெற்றோர்களும் மாணவர்களும் உள்ளார்கள். தேர்வு நடத்துவதாக முடிவெடுத்தால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் 10 நாட்களாவது பள்ளிக்குவந்து பயிற்சி எடுத்தால் மட்டுமே தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதுவார்கள்.  எனவே 10 ஆம் வகுப்பு தேர்வு குறித்து உறுதியான அறிவிப்பு வெளியிடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் வேண்டுகிறோம் என அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.  
 

click me!