கொரோனாவில் இருந்து தப்பிக்க முகக்கவசம் மட்டும் போதாது .!! முழு பாதுக்காப்பு கவசம் தேவை : ஆசிரியர்கள்

By Ezhilarasan BabuFirst Published Apr 24, 2020, 3:45 PM IST
Highlights

ஆனால்  வெறும் முகக்கவசம் மட்டும் அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபவரின் நிலை என்னவாகும்,  உரிய பதுகாப்பு இன்றி பணியாற்றுவது  எப்போதும் அச்சத்துடனே பணிபுரியும் சூழலை எற்படுத்துகிறது. 

கொரொனா தடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு முழு பாதுகாப்பு கவசம் உடை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கம் தெரிவித்துள்ளதாவது,   கொரோனா என்ற கொடிய வைரஸ்  உலகநாடுகளையே அச்சுறுத்தி உறையவைத்துக்கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளே திணறிக்கொண்டிருக்கும் நிலையில் மத்திய, மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் கொரோனா வைரஸ் அதிகம் பரவாமல் கட்டுப்படுத்தியிருப்பதற்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வாழ்த்தி வரவேற்கிறது. 

மேலும், இப்பணியில் மருத்துவர்,செவிலியர்,காவலர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தூய்மைப்பணியாளர்களின் மிகவும் சிறப்புக்குரியது கொரோனா பரவல் தடுப்பு நாடவடிக்கை பணியில் ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . தினமும் காலை 6 மணிமுதல் மதியம் 1 மணிவரை போக்குவரத்து மற்றும் உரிய அனுமதி அட்டையின்றி வருபவர்களுக்கு விழிப்புணர்வு அறிவுரை வழங்கிவருகிறார்கள்.  இப்பணியில் ஈடுபடுவோர் வெறும் முககவசம் மட்டுமே பாதுக்காப்பாக அமையாது. இரண்டு மருத்துவமனைகளை நிருவகித்து வந்த மருத்துவர் சைமன் அவர்கள் உரிய பாதுகாப்போடு மருத்துவம் பார்த்தும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மரணமடைந்தார்.

ஆனால்  வெறும் முகக்கவசம் மட்டும் அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபவரின் நிலை என்னவாகும்,  உரிய பதுகாப்பு இன்றி பணியாற்றுவது எப்போதும் அச்சத்துடனே பணிபுரியும் சூழலை எற்படுத்துகிறது. மேலும் காலை 6 மணிக்கே பணிக்கு வரச்சொல்வதால் ஆசிரியர்கள் உணவின்றியும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சரியான நேரத்தில்  உணவு வழங்க வேண்டுகிறோம் . ஆகையால் மருத்துவர்,செவிலியர்,காவலர்,ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தூய்மைப்பணியாளர்கள்,செய்தியாளர்கள் உள்ளிட்ட இப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் முழு பாதுகாப்பு கவச உடை வழங்கி கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  
 

click me!