சீன வைரசை எதிர்த்து அரசுடன் கைகோர்த்த ஆசிரியர்கள்..!! ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு...!!

By Ezhilarasan BabuFirst Published Mar 24, 2020, 10:57 AM IST
Highlights

இதனால் வாழ்வாதாரம்  இழந்துள்ள அவர்களுக்கு தொழிலதிபர்கள்,  பெருநிறுவன அதிபர்கள் செல்வந்தர்கள் முன்வந்து உதவ வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ள நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது . 
 

கொரோனா அச்சுறுத்தல்,  144 தடை உத்தரவு உள்ளிட்டவற்றால் வாழ்வாதாரம் இழந்துள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் முன்வந்துள்ளது .  கொரோனாவை தடுக்க தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது,   கூலி தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .  இதனால் வாழ்வாதாரம்  இழந்துள்ள அவர்களுக்கு தொழிலதிபர்கள்,  பெருநிறுவன அதிபர்கள் செல்வந்தர்கள் முன்வந்து உதவ வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ள நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது . 

இந்நிலையில் அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பிகே இளமாறன் ,   தமிழக முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம் :-  மாண்புமிகு ஐயா அவர்களுக்கு வணக்கம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றி பாராட்டுகிறேன் ,  மேலும் தமிழ்நாட்டில் எப்போதெல்லாம் பேரிடர் காலம் அசாதாரண சூழல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஆசிரியர்களும் சமூக அக்கறையுடன் தங்களது பங்களிப்போடு ஒத்துழைப்பு நல்கி ஆதரவு அளித்து வருகிறோம் என்றால் அது மிகையாகாது .  தற்போது தமிழக மக்களை காப்பாற்றிட கொரோனாவை . 

விரட்டியடிக்கும் முயற்சியில் தமிழக அரசுக்கு உறுதுணையாக,  ஏழை அமைப்புசாரா தொழிலாளிகளுக்கு உதவிடும் வகையில் ஆசிரியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்கிட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது .  அதனடிப்படையில் கடந்தகால நடைமுறைகளைப் பின்பற்றி ஏப்ரல் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்வதற்கு வசதியாக ஆணை பிறப்பித்து உதவிட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறோம்.  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

click me!