பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வால் கொரோனா பரவும் அபாயம்..!! வேண்டாம் என தலையில் அடித்துக் கதறும் ஆசிரியர்கள் ..

By Ezhilarasan BabuFirst Published May 16, 2020, 11:19 AM IST
Highlights

ஒவ்வொரு நாளும் 9 லட்சத்து  45 மாணவர்களுக்கும்  40,000 மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் ,பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுமா ? 
 

கொரோனா கோரதாண்டவம்  குறையும் வரை-மாணவர்களின் நலன்கருதி10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வினை தள்ளிவைக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது . இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 10 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வினை நடத்த ஆயத்தப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. அதேவேகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவும் விஸ்வரூபமெடுத்துவருகிறது.   இந்நிலையில் ஒத்தி  வைக்கப்பட்ட +1 தேர்வு ஜூன் 2ஆம் தேதியும் தேர்வு எழுத இயலாமல் போன 36,842 பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதியும் ஜூன் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

  

இந்நிலையில், நடைமுறை சிக்கலையும் அரசு ஆராயவேண்டும். 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 2 மாதங்களாக விடுப்பிலிருந்து நேரிடையாக தேர்வுஎழுதச்சொல்வதால் மனஉளைச்சலில் உள்ளனர்,  ஏற்கனவே வீட்டிற்குள் முடங்கி  வாழ்வாதாரம் இழந்துள்ளவர்களுக்கு மேலும் மனஅழுத்தத்தை தேர்வு அறிவிப்பு ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் விடுப்பு அளித்ததால் பல மாணவர்கள் சொந்த ஊருக்கு வெளிமாவட்டங்களுக்கும் சென்றுள்ளார்கள். மே-31 வரை ரயில்கள் ,பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் அவரவர் வீட்டிற்கு உடனடியாக திரும்ப e-pass வாங்க மாணவர்களுக்கு அறிவுறுத்த தலைமையாசிரியர்களுக்கு வாய்ஸ் மெசஜ் அனுப்பப்பட்டுவருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள். மேலும் வெளிமாவட்டங்களிலிருந்து வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தபடுவார்கள் என்றஅறிவிப்பும் வெளியிட்டுவிட்டு பொதுத்தேர்வும் நடத்துவது மாணவர்கள்- பெற்றோர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

பல பள்ளிகள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியிருக்கும் கொரோனா தடுப்பு சிறப்பு முகாம்களாகவும் இருந்துவருவது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருக்கும் மாணவர்களின் நிலையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 
மேலும், ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் என தனிமனித இடைவெளி பின்பற்றப்படும் என்றாலும் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சமாக ஒருபள்ளிக்கு 20 மாணவர்கள் முதல் அதிகபட்சமாக 1000 மாணவர்கள் வரை தேர்வெழுத உள்ளார்கள். என்னதான் தேர்வறையில்  தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட்டாலும் பள்ளிக்குள் நுழையும் போதும் தேர்வுமுடிந்து திரும்பும்போது சமூக இடைவெளி கடைபிடிக்க வாய்பில்லை. வினாத்தாள், விடைத்தாள்கள் பிரித்து வழங்குவது முடிந்தபிறகு விடைத்தாளில் முத்திரையிட்டு அனுப்புவதிலும் பாதுகாப்பு இன்மையே தொடரும்.  ஒவ்வொரு நாளும் 9 லட்சத்து  45 மாணவர்களுக்கும்  40,000 மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை  செய்யப்படுமா ? 

ஒருவருக்கு தொற்று இருந்தாலும் பல ஆயிரக்கணக்காணோரைப் அது பாதிக்கும். தமிழ்நாட்டில்  கொரோனாவின் கோரதாண்டவத்தினால் பாதிப்பு 10,000 த்தை தாண்டியுள்ளதால் மக்கள் ஒருவித  பயத்துடனே வாழ்ந்துவருகிறார்கள். ஒருபுறம் ஊரடங்கு நீட்டிப்பு  மறுபுறம் 9 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் எழுதும் பொதுத்தேர்வு அறிவிப்பு மேலும்மேலும் வெந்தப் புண்ணில் வேல்பாய்ச்சுகிறது. எனவே 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வினை ரத்து செய்ய இயலாதபட்சத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுப்பாட்டிற்குள்  வந்தப் பிறகே தேர்வு நடத்தவேண்டும். அதுவும் மாணவர்களுக்கு நினைவூட்டல், ஆயத்தப்பயிற்சி மற்றும் புத்தாக்கப்பயிற்சிக்கு  இரண்டுவாரம் பள்ளிவைத்தபிறகே தேர்வு வைத்தால்தான் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும். மேலும்11 ஆம் வகுப்பிற்கு பள்ளி அளவில் தேர்ச்சியளித்திட ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

 

click me!