விவசாயிகளுக்கு குட்நீயூஸ்: வேளாண்மைத்துறைக்கு 1லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு... அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

By T BalamurukanFirst Published May 16, 2020, 11:07 AM IST
Highlights

வேளாண்துறைக்கு 1லட்சம் கோடி அறிவித்துள்ளார் இது சுமார் 2 கோடி விவசாயிகளுக்கு பலனளிக்கும்.மீன்வளத்துறைக்கும் கால்நடைத்துறைக்கும் சிறப்பு சலுகைகளை அறிவித்திருக்கிறார்.
 

மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீத்தாரமன் சிறப்பு பொருளாதார திட்டங்களில் இருந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.இவரை பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதாக பாராட்டியிருக்கிறார்.

கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து நாட்டை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தார். இதன்படி சுய சார்பு திட்டத்தின் மூன்றாம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீத்தாராமன்  வெளியிட்டார்.அதில், 2020-21 ஆம் ஆண்டில் பால் உற்பத்திப் பொருள்களுக்கு 2% வட்டி மானியம் வழங்கப்படும். மேலும், உடனடியாக பணம் செலுத்துதல் மற்றும் வட்டி சேவைக்கு மேலும் 2% வட்டி மானியம் வழங்கப்படும். வேளாண்துறைக்கு 1லட்சம் கோடி அறிவித்துள்ளார் இது சுமார் 2 கோடி விவசாயிகளுக்கு பலனளிக்கும்.மீன்வளத்துறைக்கும் கால்நடைத்துறைக்கும் சிறப்பு சலுகைகளை அறிவித்திருக்கிறார்.

 இதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில், 'நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த திட்டங்களை வரவேற்கிறேன்.இது கிராமப்புற பொருளாதாரம், நமது கடின உழைப்பாளி விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் துறைகளுக்கு உதவும். குறிப்பாக வேளாண்மைத்துறைக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை நான் வரவேற்கிறேன். விவசாயிகளின் வருமானத்தை இது அதிகரிக்கச் செய்யும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

click me!