Heavy rain: ஆண்டவா இது என்ன கொடுமை.. 4 ஆம் தேதிவரை நடக்கப் போகுது பயங்கரம்.?? அலறும் வானிமை மையம்.

Published : Nov 30, 2021, 02:57 PM ISTUpdated : Nov 30, 2021, 02:58 PM IST
Heavy rain: ஆண்டவா இது என்ன கொடுமை..  4 ஆம் தேதிவரை நடக்கப் போகுது பயங்கரம்.?? அலறும் வானிமை மையம்.

சுருக்கம்

தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று மாலை தெற்கு அந்தமான் கடற் பகுதிக்கு நகரக்கூடும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 2 ஆம்  தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதனை அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று 4 ஆம் தேதி வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்பகுதியை நெருங்கக்கூடும். 

தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் (5.8  கிலோமீட்டர் உயரம் வரை ) நிலவும் வளிமண்டல சுழற்சி குமரிக்கடல் (1.5  கிலோமீட்டர் உயரம் வரை ) பகுதிவரை நீடிப்பதன் காரணமாக 30.11.2021: திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மேலும், 01.12.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 

02.12.2021,03.12.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 04.12.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): வீரபாண்டி (தேனி) 12, திருப்புவனம் (சிவகங்கை), பாபநாசம் (திருநெல்வேலி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), காயல்பட்டினம் (தூத்துக்குடி) தலா 9, மணிமுத்தாறு (திருநெல்வேலி), பரமக்குடி (ராமநாதபுரம்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), மண்டபம் (ராமநாதபுரம்), ஆய்க்குடி (தென்காசி) தலா 8, கோவிலங்குளம் (விருதுநகர்), மதுரை விமான நிலையம் (மதுரை), சிவகாசி (விருதுநகர்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), தனியமங்கலம் (மதுரை) தலா 7,வாலிநோக்கம் (ராமநாதபுரம்), உத்தமபாளையம் (தேனி), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), சோழவரம் (திருவள்ளூர்), உசிலம்பட்டி (மதுரை), மதுராந்தகம் (செங்கல்பட்டு), கயத்தாறு (தூத்துக்குடி), வத்திராயிருப்பு (விருதுநகர்),), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), திருவாடானை (இராமநாதபுரம்), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), கூடலூர் (தேனி), தென்காசி (தென்காசி) தலா 6.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்க கடல் பகுதிகள்

30.11.2021:  தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று மாலை தெற்கு அந்தமான் கடற் பகுதிக்கு நகரக்கூடும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 2 ஆம்  தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதனை அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று 4 ஆம் தேதி வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்பகுதியை நெருங்கக்கூடும். 

இதன் காரணமாக 30.11.2021: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 01.12.2021: அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 02.12.2021: தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

03.12.2021: மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 04.12.2021: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகள்

தற்போது மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மகாராஷ்டிரா - கோவா கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக 30.11.2021, 01.12.2021: தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பேமிலி, பிரெண்ட்ஸ் வாட்ஸ்ஆப் குரூப்களில் கூட விஷம் பரப்பும் மதவாதிகள்.. அலெர்ட் கொடுக்கும் முதல்வர்..
நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு