
கடலில் இருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலப்பரப்பிற்கு வந்து சென்றதே சென்னை மழைக்கு காரணம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும்,டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும்
நாளை கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும், நேற்றைய மழை குறித்த விளக்கமளித்த அவர், நேற்று பெய்த மழைக்கும் மேக வெடிப்புக்கும் (cloud burst) தொடர்பில்லை என்றார்.
இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம் பின்வருமாறு:- தமிழக கடற்கரையை ஒட்டி (5.8 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 31.12.2021: கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 01.01.2022: கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
02.01.2022: கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 03.01.2022: தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும். ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும் 04.01.2022: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): டிஜிபி அலுவலகம் (சென்னை) 24, ஆவடி (திருவள்ளூர்) 23, எம்ஆர்சி நகர் (சென்னை) 21, சென்னை நுங்கம்பாக்கம், பூந்தமல்லி (திருவள்ளூர்), எம்ஜிஆர் நகர் (சென்னை), அம்பத்தூர் (திருவள்ளூர்) தலா 20, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), செம்பரபாக்கம் (திருவள்ளூர்), தொண்டையார்பேட்டை (சென்னை), ஏசிஎஸ் கல்லூரி (சென்னை) தலா 19, அய்யனாவரம் (சென்னை), ஒய்எம்சிஏ நந்தனம் தலா 18, பெரம்பூர் (சென்னை) 15, சோழிங்கநல்லூர் (சென்னை), கொரட்டூர் (திருவள்ளூர்) தலா 12, சீர்காளி (மயிலாடுதுறை), திரூர் கேவிகே (திருவள்ளூர்) 11 , கொள்ளிடம் (மயிலாடுதுறை), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), பூண்டி (திருவள்ளூர்) தலா 10, கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), சோழவரம் (திருவள்ளூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), பள்ளிக்கரணை (சென்னை) தலா 9, சிதம்பரம், மயிலாடுதுறை (மயிலாடுதுறை), தாம்பரம் (செங்கல்பட்டு), சத்யபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு) தலா 7.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: 31.12.2021 ,01.01.2022: குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரியகையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.01.2022 முதல் 04 .01.2022 வரை: குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.