தமிழக காவல்துறை டிஜிபி கையில் இல்லை… சர்ச்சையை கிளப்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!!

Published : Dec 11, 2021, 03:37 PM ISTUpdated : Dec 11, 2021, 03:39 PM IST
தமிழக காவல்துறை டிஜிபி கையில் இல்லை… சர்ச்சையை கிளப்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!!

சுருக்கம்

தமிழக காவல்துறை ஒரு கட்சி சார்ந்த ஏவல் துறையாக செயல்படுவதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழக காவல்துறை ஒரு கட்சி சார்ந்த ஏவல் துறையாக செயல்படுவதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் 140வது பிறந்த நாள் விழா, சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டு பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மறுநாள் பட்டமளிப்பு விழா நடைபெற இருந்தது என்றும் அது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஒரு நிகழ்வு என்றும் கூறியதோடு, அமைச்சர்கள், மாணவர்கள் என அனைவரும் இதற்காகக் காத்திருந்ததால் தான் ஆளுநரால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை என்று தெரிவித்தார். அது ஆளுநரின் தனிப்பட்ட முடிவு. என்னைப் பொறுத்தவரை இதில் தவறு இல்லை. அவர் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உயிரிழந்தோரின் புகைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார். தமிழக மக்களும் பாஜகவினரும் எழுச்சிமிகு பிரியா விடை கொடுத்தனர். இதை அரசியலாக்குவது தேவையில்லாதது ஒன்று.

ஆளுநர் அரசு நிகழ்வில் தான் பங்கேற்கச் சென்றிருந்தார். முப்படைகளின் ராணுவ தளபதி பிபின் ராவத் உடலுக்கு ஆளுநர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாதது தவறில்லை என்று கூறினார். அதேபோல யூடியூபர் மாரிதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், திமுக ஐடி அமைப்பைச் சேர்ந்தவர்கள், நிர்வாகிகள், மற்ற திராவிட அமைப்பினர் என்னவெல்லாம் பேசியுள்ளனர் தெரியுமா? அவர்கள் பேசிய கருத்துகள் எல்லாம் என்னிடம் உள்ளது. பிபின் ரவாத் உயிரிழப்பு குறித்துப் பல பொய் கருத்துகளை அவர்கள் பதிவிட்டுள்ளனர். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாரிதாஸ் மீது 124 ஏ சட்டப்பிரிவின் கீழ் தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றால், இவர்கள் பேசியதெல்லாம் அதை விட 100 மடங்கு மோசமான கருத்துகள். அதுமட்டுமின்றி பிபின் ராவத் இறந்தது சரி என்று திக துணை கழகங்கள் கொண்டாடியுள்ளனர். ஆனால், இங்குள்ள அரசுக்கு அதைக் கண்டுகொள்வதில்லை. தேசியவாதி ஒருவர், கருத்துச் சுதந்திரத்திற்கு அருகில் ஒரு கருத்தைச் சொல்லும் போது அதைத் தேவையின்றி பிரச்சினை ஆக்குகிறார்கள். இங்குத் தமிழகத்தில் போலீசார் டிஜிபி கட்டுப்பாட்டிலேயே இல்லை. சைக்கிளில் செல்வதற்கும் செல்பி எடுப்பதற்கும் தான் இங்கு தமிழக டிஜிபி உள்ளார்.

தமிழகத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர்களும் ஐடி பிரிவினரும் தான் போலீசாரை கட்டுக்குள் வைத்துள்ளனர். அவர் நேர்மையான டிஜிபியாக இருந்தால் பாரபட்சம் இல்லாமல் அனைவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பிபின் ராவத் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது, அதைக் கொண்டாடிப் பதிவிடுகிறார்கள் என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா? இவர்கள் மீது டிஜிபி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கச் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்புகள் ஒருபோதும் பொய்யாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இங்கு நிலைமை அப்படி இல்லை. இங்கு முரசொலிக்குச் சந்தா கொடுத்தவர்கள், திமுக சார்பில் போட்டியிட்டவர்களுக்குத் தான் அரசில் முக்கிய பதவிகள் அளிக்கப்படுகிறது. தமிழக அரசுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். எங்கள் கட்சி பொறுமையாக இருக்கிறது. ஆனால் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று அண்ணாமலை தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!