தமிழக அமைச்சரவைக் கூட்டம் 2 ஆம் தேதி இல்ல !! நவம்பர் 7 ஆம் தேதி தான் !!

Published : Oct 31, 2019, 09:47 PM IST
தமிழக அமைச்சரவைக் கூட்டம் 2 ஆம் தேதி இல்ல !! நவம்பர் 7 ஆம் தேதி தான் !!

சுருக்கம்

முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் நவம்பர் 2-ம் தேதி நடைபெறுவதாக இருந்த தமிழக அமைச்சரவை கூட்டம் திடீரென வரும் 7-ம் தேதி  ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நவம்பர் 2-ம் தேதி பகல் 11 மணிக்கு கூடுகிறது என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் மற்றொரு அறிவிப்பு வந்தது.

அதில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பட்டது. 7 ஆம் தேதி காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி தலைமையிலான இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.  இதில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றில் பல முக்கிய முடிவுகள் எடுப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.

மேலும்  ஆழ்துளை கிணறுகள் தெடர்பாக புதிய விதிமுறைகள் வகுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த கொள்கை ரீதியான பல்வேறு முடிவுகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

விஜய் கூட்டணிக்கு வராவிட்டால்..? அமித் ஷாவின் ஹிடன் அஜெண்டா..! திமுகவுக்கு பொறி வைக்கும் ஃபைல்ஸ்..!
பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!