
கோவை விமான நிலையத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
கடந்த 6 மாதமாக தமிழக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. ஆனால், அந்த பரபரப்பு சூழலால், வாக்களிக்கும் மக்களுக்கு எவ்வித பலனும் இல்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக கூட்டப்பட்ட சிறப்பு சட்டமன்ற கூட்டத்தின் சம்பவம், தமிழகத்துக்கு தலைகுனிவு தான் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடக்கும் ஆட்சியை கவிழ்க்க அடிக்கடி ஒவ்வொரு நாடகம் நடத்தப்படுகிறது. விரைவில் தமிழத்துக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் சூழலில், இன்றைய ஆட்சி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.