"சின்னம்மா என்று ஜெயா டிவியில் படிக்க சொல்வதால் கடுப்பாகிவிட்டேன்" - பாத்திமா பாபு பகீர் பேட்டி

 
Published : Feb 25, 2017, 09:29 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
"சின்னம்மா என்று ஜெயா டிவியில் படிக்க சொல்வதால் கடுப்பாகிவிட்டேன்" - பாத்திமா பாபு பகீர் பேட்டி

சுருக்கம்

செய்தி வாசிப்பாளரும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான பாத்திமா பாபு , ஜெயலலிதா பிறந் நாளான நேற்று ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.

கடந்த பல ஆணடுகளாக ஜெயா டிவியில் பாத்திமா பாபு செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். தேர்தல் சமயங்களில் அதிமுகவுக்காக பிரச்சாரம் மேற்கொள்வார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா அணியில் இருந்து வந்த பாத்திமா பாபு, திடீரென ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.

தான் ஏன் இந்த முடிவை எடுத்தேன் என்பது குறித்து பாத்திமா பாபு செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

அப்போது, ஜெயலலிதாவை அம்மா என்று அழைத்தா வாயால், சசிகலாவை செய்தி வாசிக்கும்போது சின்னம்மா என்று அழைக்க சொல்லி ஜெயா தொலைக்காட்சி என்னை நிர்பந்தப்படுத்தியது,எனக்கு நெருடலை தந்தது என தெரிவித்தார்.

அதற்கு தனது மனசாட்சி இடம் கொடுக்கவிலைலை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அதனால்தான் மக்களின் முதலமைச்சராக திகழும் ஓபிஎஸ் அணியில் இணைந்ததாக குறிப்பிட்டார்.

மக்களுக்காக இறங்கி வந்து பணியாற்றும் பண்பும், மக்களோடு மக்களாகப் பழகும் தன்மையும், பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் குணமும் ஓபிஎஸ் அவர்களிடம் மட்டும்தான் இருக்கிறது என்று கூறிய பாத்திமா பாபு ஓபிஎஸ்க்கு  ஒன்றரைக் கோடி கட்சித் தொண்டர்களும், ஏழு கோடிக்கும் தமிழக மக்களும் ஆதரவு அளிப்பதாக பாத்திமா பாபு தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

இந்த மூன்று நாடுகளின் ஜனாதிபதிகளைக் கொல்ல துடிக்கும் அமெரிக்கா..? டிரம்பின் சதித் திட்டம்..!
அப்போ எல்லாமே வதந்தி தானா.. போட்டி போட்டு மறுத்த டிடிவி தினகரன், தமிழிசை.. என்ன விஷயம்?