தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 124 ஆக உயர்வு..!! டெல்லி சென்று திரும்பிய 616 பேர் வைரஸ் தொற்றுடன் மாயம்...!!

By Ezhilarasan BabuFirst Published Mar 31, 2020, 8:42 PM IST
Highlights

மீதமுள்ள 616 பேர்  பேரை தேடி வருகிறோம் அவர்களுடைய தொலைபேசிகள் அனைத்து வைக்கப்பட்டுள்ளது தயவு செய்து அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாங்களாக முன் வந்து சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுக்கும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனால் மொத்த கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 124 ஆக அதிகரித்துள்ளது.  ஏற்கனவே 74 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.  டெல்லி மாநாட்டுற்கு சென்றவர்கள் தயவு செய்து தாங்களாகவே முன்வந்து தகவல் கூறுங்கள் இல்லை எனில் பலருக்கு வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் எச்சரித்துள்ளார்.   இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்ளை சந்தித்த அவர் டெல்லியில் மத ரீதியாக மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் உளவுத் துறை மூலமாக கணக்கெடுப்பு நடத்தினோம்,   அதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தினர் .  அதில் டெல்லியில் மதரீதியிலான  கூட்டத்தில் கலந்து கொண்டு பின் தமிழகம் திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.  

இதனால் தமிழ்நாட்டில் மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதில் 45பேர் டெல்லியில் நடந்த மத நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. என்றார்,  தொடர்ந்து பேசிய அவர்,   மொத்தத்தில் இன்று ஒரே நாளில்  தமிழகத்தில்  57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில்  124 ஆக அதிகரித்துள்ளது.  டெல்லியில் நடந்த மத நிகழ்வில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பிய 515 பேரை  அடையாளம் கண்டு தனிமைப்படுத்தியுள்ளோம் என்ற சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் ,  மீதமுள்ள நபர்களின் தொலைபேசிகள் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.  எனவே அனைவரும் தயவுசெய்து சுகாதாரத்துறையை தொடர்பு கொள்ளுங்கள்  என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

டெல்லி  கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பியவர்களை பரிசோதனை செய்ததில்  பலருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,  அதில்  திருநெல்வேலி சேர்ந்த 22 பேருக்கும் ,தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு வருக்கும் ,கன்னியாகுமரியைச் சேர்ந்த  4 பேருக்கும்,  நாமக்கல்லைச் சேர்ந்த  18 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஆக மொத்தத்தில்  தமிழகத்தில் மொத்தம் 124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா தெரிவித்துள்ளார்.  டெல்லியில் மதம் சார்ந்த மாநாட்டில் பங்கேற்ற  1131 பேரில் 515 பேரைக் கண்டறிந்து தனிமைப்படுத்தியுள்ளோம் என்றும், மீதமுள்ள 616 பேர்  பேரை தேடி வருகிறோம் அவர்களுடைய தொலைபேசிகள் அணைத்து வைக்கப்பட்டுள்ளது . தயவு செய்து மற்றவர்களுக்கு நோய் பரவு வதற்கு முன்னர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாமாக முன் வந்து சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுக்கும் படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  இதுவரை  தமிழகம் முழுவதும் 77 ஆயிரத்து 330 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் பீலா ராஜேஸ் தெரிவித்துள்ளார்.  

 

click me!