கொரோனா வைரஸ் நுழைய இது ஒன்னும் சீனா இல்ல...!! அடித்து தூக்க தயாரானது தமிழக சுகாதாரத்துறை...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 29, 2020, 1:08 PM IST
Highlights

தமிழ்நாட்டில் சென்னை கோவை திருச்சி மதுரை உள்ளிட்ட முக்கிய முக்கியமான விமான நிலையங்களில் சுகாதாரத்துறை மூலம் பயணிகளிடம் வைரஸ் குறித்த அறிகுறி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக  சிறப்பு மருத்துவ  குழுக்கள்  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
 

கொரனா வைரஸ் குறித்து மதுரை விமான நிலையத்தில் மதுரை மாநகர முதன்மை சுகாதார அலுவலர் பிரியா ராஜ்,   தலைமையில் ஆய்வு நடைபெற்றது.  சீனாவில் கொரனா வைரஸ் பரவி வருவதை அடுத்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் பலபடுத்தபட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தமிழகத்தில் ஊடுருவிவிடாத படிக்கு தமிழக சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. நாட்டில் உள்ள  அனைத்து விமான நிலையங்களிலும்  பயணிகள் தீவிர பரிசோதனைசெய்யபடுகின்றனர். 

இந்நிலையில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை விமான நிலையங்களில் சுகாதார துறை மூலம் பயணிகளிடம் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக மதுரை விமான நிலையத்தில் தமிழக அரசின் சுகாதார துறை மூலம் மதுரை மாநகராட்சி முதன்மை சுகாதார அலுவலர் பிரியா ராஜ் ,   தலைமையில் சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டு பயணிகளிடம்  தீவிர பரிசோதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மதுரை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்தில் இயக்குநர் செந்தில்வளவன் முன்னிலையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. 

 பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதன்மை சுகாதார அலுவலர் பிரியாராஜ் , சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் அந்நாட்டு மக்களிடையே மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.இந்தியாவில் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில்  பயணிகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதி அனுமதிக்கப்படுகிறார்கள். அந்தவகையில் தமிழ்நாட்டில் சென்னை கோவை திருச்சி மதுரை உள்ளிட்ட முக்கிய முக்கியமான விமான நிலையங்களில் சுகாதாரத்துறை மூலம் பயணிகளிடம்  வைரஸ் குறித்த அறிகுறி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக  சிறப்பு மருத்துவ  குழுக்கள்  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

click me!