அடுத்தடுத்து 87 பேருக்கு கொரோனா... ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மருத்துவ பரிசோதனை..!

By vinoth kumarFirst Published Aug 2, 2020, 12:15 PM IST
Highlights

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உதவியாளர் உட்பட 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தற்போது மருத்துவ பரிசோதனைக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனியார் மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உதவியாளர் உட்பட 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தற்போது மருத்துவ பரிசோதனைக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனியார் மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,51,738ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கொரோனா எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், அரசியல் வாதிகள் உள்ளிட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஆளுநர் மாளிகையில் வேகமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆளுநர் மாளிகையில் கடந்த வாரம் சிலருக்கு கொரோனா ஏற்பட்டது. அதன்பின் மேலும் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அடுத்தடுத்து பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பை அடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னைத்தானே 7 நாட்கள்  தனிமைப்படுத்தி கொண்டார். 

இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் வரிசையாக பலருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!