குடி மனிதனை கொடூரனாக்கும் என்பதற்கு இது தான் சிறந்த உதாரணம்.. கண் சிவக்கும் அன்புமணி ராமதாஸ்..!

Published : Apr 19, 2022, 01:43 PM IST
குடி மனிதனை கொடூரனாக்கும் என்பதற்கு இது தான் சிறந்த உதாரணம்.. கண் சிவக்கும் அன்புமணி ராமதாஸ்..!

சுருக்கம்

அனைத்துக் குற்றங்களுக்கும் பிறப்பிடமாக விளங்குவது மது தான். கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களுக்கும் மது தான் மூல காரணமாக இருக்கிறது. மது வணிகம் தொடரும் வரை, மனித குலத்துக்கு எதிரான இத்தகைய கொடிய குற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது.

மது வணிகம் தொடரும் வரை, மனித குலத்துக்கு எதிரான இத்தகைய கொடிய குற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது என அன்புமணி ராமதாஸ் ஆவேசமாக கூறியுள்ளார்.

குழந்தை கொலை

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் காமராஜர் நகரில் அருகே கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் 2 வயது குழந்தையை சுவற்றில் அடித்துக் கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அனைத்துக் குற்றங்களுக்கும் பிறப்பிடமாக விளங்குவது மது தான் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மனித குலத்துக்கு எதிரானது மது

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தூத்துக்குடி தாளமுத்து நகரில் குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட மோதலில் 2 வயது குழந்தையை சுவற்றில் அடித்து கணவன் கொலை செய்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். குடி மனிதனை கொடூரனாக்கும் என்பதற்கு இது தான் சிறந்த உதாரணம் ஆகும்.

அனைத்துக் குற்றங்களுக்கும் பிறப்பிடமாக விளங்குவது மது தான். கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களுக்கும் மது தான் மூல காரணமாக இருக்கிறது. மது வணிகம் தொடரும் வரை, மனித குலத்துக்கு எதிரான இத்தகைய கொடிய குற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது.

மதுவிலக்கு 

குற்றங்கள் இல்லாத, அமைதியான தமிழகத்தை உருவாக்க மதுவிலக்கு தான் ஒரே வழி ஆகும். அதனால் தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?