”திருட முடியாத ஒரே சொத்து கல்விதான்..” உங்க கனவை பிள்ளைகள் மீது திணிக்காதீங்க.! முதல்வர் ஸ்டாலின் !

Published : Apr 19, 2022, 01:02 PM IST
”திருட முடியாத ஒரே சொத்து கல்விதான்..” உங்க கனவை பிள்ளைகள் மீது திணிக்காதீங்க.! முதல்வர் ஸ்டாலின் !

சுருக்கம்

சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மேல்நிலை பள்ளியில் “நம் பள்ளி நம் பெருமை” என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடக்கி வைத்தார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு தொடக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவில் “நம் பள்ளி நம் பெருமை” திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். நம் பள்ளி நம் பெருமை என்ற பெயரில் விழிப்புணர்வு பரப்புரை வாகனத்தையும் முதல்வர் தொடக்கி வைத்தார். அப்போது பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், 'பள்ளிப்பருவம் திரும்பக்கிடைக்காத மகிழ்ச்சி. மனநிறைவு, மகிழ்ச்சி, கொண்டாட்டம் உடையது பள்ளிப்பருவம். இத்தகைய பள்ளி பருவத்தை அனைவரும் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவானது ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். உங்களிடமிருந்து யாராலும் பிரிக்கமுடியாது.  திருட முடியாத சொத்து என ஒன்று உண்டு என்றால் அது உங்களின் கல்வி மட்டும்தான். கல்வியை யாராலும் திருட முடியாது. அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. எத்தனை மிக மிக வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள் அந்த அளவு கல்விக்காக இந்த அரசு மிக மிக மிக முக்கியத்துவத்தை தொடர்ந்து கொடுத்து வருகிறது. 

கல்வி எனும் நீரோடை சீராக செல்ல மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களின் எண்ணம் ஒரேசீராக இருக்க வேண்டும். பெற்றோர் உங்கள் குழந்தைகள் என்னவாகவேண்டுமென விரும்புகிறார்களோ அதற்கு தடைபோராமல் தடங்கள் செய்யாமல் வழிகாட்டுங்கள், உதவுங்கள். பெற்றோர் தங்களது கனவுகளை பிள்ளைகள் மீது திணித்துவிட வேண்டாம்.மாணவச்செல்வங்களை வளர்த்தெடுப்பதை குறிக்கோளாக கொண்டு பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளிகள் செயல்படவேண்டும்.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் மகிழ்ச்சியோடும், பாதுகாப்போடும் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவது தான் நமது அரசினுடைய நோக்கம், குறிக்கோள், லட்சியம். பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதிலும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும் இந்திய துணைக்கண்டத்திற்கே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலம்' என்று பேசினார்.

இதையும் படிங்க : எருமைமாடு கூட கருப்புதான்..அதை திராவிடன்னு கூப்பிட முடியுமா ? யுவனை அட்டாக் செய்த சீமான் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?