தமிழக கேரள எல்லையை மூட முடிவு...!! கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு எடுத்த அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 20, 2020, 1:17 PM IST
Highlights

கேரளாவில் இந்த வைரசுக்கு இதுவரை 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புக்ள ஏதும் இல்லை. ஆனாலும் நோய் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.    
 

தமிழக கேரள எல்லையை இன்றுமுதல் மூட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் . கொரோனா வைரஸ் தடுப்பு  நடவடிக்கையாக தமிழக கேரள எல்லையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது .  சீனாவில் தோன்றிய காரணம் வைரஸ் சுமார் 120 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது .  இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  உலகளவில் இந்த வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது . 

இந்தியாவிலும் இந்த வைரஸ் தன் வேலையைக் காட்ட தொடங்கி உள்ளது.  குறிப்பாக டெல்லி ,  மகாராஷ்டிரா ,  பஞ்சாப் ,  ராஜஸ்தான் ,  கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது .  இந்தியாவில் இந்த வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது . சுமார்  200 க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் வைரஸ் அறிகுறிகள் அதிகமாக இருப்பதால் தமிழக-கேரள  எல்லையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவில் இந்த வைரசுக்கு இதுவரை 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புக்ள ஏதும் இல்லை. ஆனாலும் நோய் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

   

இதனால்  தமிழக-கேரள எல்லை மூடப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் .  இது நோய் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைதான்  என  கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது .  அதேபோல் கேரளாவில் இருந்து வரும் அனைத்து விதமான வாகனங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது . குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள 9 சோதனைச் சாவடிகள் இன்று மாலை முதல் மூடப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் .

 

click me!