தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்..? மறுத்த எடப்பாடி... பணித்த மத்திய அரசு..!

Published : Jun 26, 2019, 03:52 PM ISTUpdated : Jun 26, 2019, 03:54 PM IST
தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்..?  மறுத்த எடப்பாடி... பணித்த  மத்திய அரசு..!

சுருக்கம்

தமிழக புதிய டிஜிபியாக யாரை நியமிப்பது என்பதில் தமிழக அரசுக்கும் – மத்திய அரசுக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில்,  ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக புதிய டிஜிபியாக யாரை நியமிப்பது என்பதில் தமிழக அரசுக்கும் – மத்திய அரசுக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில்,  ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது தமிழக டிஜிபியாக இருப்பவர் டி.கே.ராஜேந்திரன். இவரது பணிக்காலம் எப்போதோ முடிவடைந்துவிட்டது. ஆனால் பணி நீட்டிப்பு பெற்று டிஜிபியாக ராஜேந்திரன் நீடித்து வருகிறார். இவரது பணிக்காலம் முடிவடைந்த சமயத்தில் புதிய டிஜிபி யார் என்கிற கேள்வி எழுந்தது. அப்போது எடப்பாடி அரசு பிடிவாதமாக ராஜேந்திரன் பதவிக்காலத்தை நீட்டிக்கச் செய்து அவரையே டிஜிபியாக தொடர வைத்தது. அந்த சமயத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கும் தமிழக அரசுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இறுதியில் எடப்பாடி தனது டெல்லி தொடர்புகள் மூலமாக ராஜேந்திரனை டிஜிபி பதவியில் தொடர வைத்தார்.

ஆனால், இந்த முறை அப்படி செய்ய வைக்க முடியாது. மேலும் குட்கா உள்ளிட்ட சில விவகாரங்களில் ராஜேந்திரன் பெயர் அடிபடுகிறது. அவரது வீட்டிலேயே சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். எனவே புதிய டிஜிபியை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் எடப்பாடி அரசுக்கு உள்ளது. வரும் 30-ம் தேதியுடன் ராஜேந்திரன் பதவிக் காலம் நிறைவடைகிறது. 

எனவே அதற்குள் புதிய டிஜிபியை எடப்பாடி அரசு நியமிக்க வேண்டும். அதன்படி தற்போது டிஜிபியாகும தகுதியுடன் ஜாபர் சேட் மற்றும் ஜே.கே. திரிபாதி உள்ளிட்ட 10 பெயர்கள் தான் முன்னிலையில் உள்ளன. இவர்களில் ஜாபர் சேட்டுக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவும், மத்திய அரசு ஆதரவு ஜே.கே. திரிபாதிக்கு உள்ளது. இப்படி பல்வேறு புகார்களுக்கு ஆளான ஜாபர் சேட்டை டிஜிபியாக நியமிக்க மத்திய பணியாளர் தேர்வாணையம் சுனக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் ஜே.கே.திரிபாதி தான் தமிழகத்தின் அடுத்த டிஜிபியாக வேண்டும் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் பிடிவாதம் காட்டி வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தின் அடுத்த டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரிபாதி சென்னை காவல்துறை ஆணையராகவும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!