இனி கோயம்பேடு மார்கெட்டுக்கு தைரியமா வரலாம்..!! அக்கு அக்காக பிரித்து மேய உத்தரவு போட்ட ஓபிஎஸ்..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 6, 2020, 1:24 PM IST
Highlights

கோயம்பேடு வணிக வளாகத்தில் அதிக மக்கள் வரத்து உள்ள பத்து நுழைவாயில்கள் கண்டறியப்பட்டு 17.0 லட்சம் செலவில் சுரங்கப்பாதை தெளிப்பான்கள் (tunnel sprayer) அமைக்கும் பணி ஓரிரு நாட்களில் முடிக்க வேண்டும்  என துணை முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் .  
 

சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ,  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது , அதன் பின்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் :-   சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அதிகாரிகளின் மேற்பார்வையில் கோயம்பேடு மொத்த காய்கறி மற்றும் வணிக அங்காடி வளாகத்தினுள்  நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.    கிருமி நாசினி தெளித்தல் சமூக இடைவெளிகளை கடைப்பிடித்தல் போன்றவற்றை உறுதிப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் துணைமுதல்வரிடம் தெரிவித்துள்ளனர். அதேபோல் துணை முதலமைச்சர் அறிவுரைக்கு இணங்க பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் கட்டாயமாக முகக் கவசம் அணியும் வகையில்  தினந்தோறும் கோயம்பேடு அங்காடிக்கு வருவோருக்கு  5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகக் கவசங்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. 

இதுவரையில் 50 ஆயிரம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது .  சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தீயணைப்புத் துறை ஆகிய துறைகளின் உதவியுடன் கோயம்பேடு வணிக வளாகம் அங்காடியில் உட்புற சாலைகளிலும் தினந்தோறும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சாலைகள் சுத்தம் செய்யப்படுகின்றன .  அண்ணா பல்கலைக் கழகத்தின் உதவியுடன் பறக்கும் இயந்திரத்தில் (DRONE) மூலம் கோயம்பேடு வணிக வளாகம் அங்காடியின் உட் பகுதிகளிலும்  கிருமிநாசினி தினமும் தெளிக்கப்பட்டு வருகிறது .  அதேபோல் வணிக வளாக அங்காடியின் வெளிப்பகுதியில் நோய் பரவலை தடுக்க வாகனங்கள் நுழையும் நுழைவாயில் மற்றும் வெளி வாயில்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது .  கோயம்பேடு வணிக வளாகத்தில் அதிக மக்கள் வரத்து உள்ள பத்து நுழைவாயில்கள் கண்டறியப்பட்டு 17.0 லட்சம் செலவில் சுரங்கப்பாதை தெளிப்பான்கள் (tunnel sprayer) அமைக்கும் பணி ஓரிரு நாட்களில் முடிக்க வேண்டும்  என துணை முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் .

 

அதேபோல் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பாக தமிழகம் முழுவதிலும் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வாடகை குடியிருப்புகள் மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர் குடியிருப்புகளில் கிருமிநாசினி தினமும் தெளிக்கப்படுகிறது .  தமிழ்நாடு குடிசைப்பகுதி சென்னை மற்றும் இதர நகரங்களில் உள்ள அதிக மக்கள் வசிக்கின்ற 305 திட்ட பகுதிகளில் பராமரிக்கப்படும் 1.49 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 1.90 கோடி திட்ட வாடிக்கையாளர்கள் கை சுத்தம் செய்யும் வகையில் தினந்தோறும் கிருமிநாசினி வழங்கப்பட்டு வருகிறது .  அதேபோல் சுகாதாரத்துறை மூலம் குழுக்கள் வர வைக்கப்பட்டு காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு வரும் வாகனங்களில் ஓட்டுனர் நடத்துனர் முதல் கோயம்பேடு வணிக வளாகத்திற்கு வரும் பொதுமக்கள் வாடிக்கையாளர்களை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என  பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

click me!