குழந்தைகள் பாதுகாப்புடன் வாழ குழந்தைகளுக்கான மாநில கொள்கை… வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! | CMStalin

By Narendran SFirst Published Nov 20, 2021, 11:44 AM IST
Highlights

#CMStalin | தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், உரிமையை பெறவும் குழந்தைகளுக்கான மாநில கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், உரிமையை பெறவும் குழந்தைகளுக்கான மாநில கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்து வந்த மாணவிக்கு அதே பள்ளியில், இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார். இதுக்குறித்து பள்ளி தலைமையாசிரியர் மீரா ஜாக்சனிடம் மாணவி புகார் செய்தபோது அவர் ஆசிரியரை கண்டிப்பதற்குப் பதில் மாணவியைக் கண்டித்துள்ளனர். இதில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதை அடுத்து பள்ளி முதல்வரையும் ஆசிரியரையும் கைது செய்ய கோரி சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து காவல்துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறியதுமின்றி மிதுன் சக்ரவர்த்தியின் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட மாணவியின் மீதே பழிசுமத்தி அவரது மரணத்திற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இதற்கிடையே தமிழகத்தில் தனியார்ப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் அத்துமீறல்கள் பெரும்பாலும் வெளிவருவதில்லை என்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தாக்குதல் குறித்து புகார் அளிக்க சுதந்திரமாக செயல்படும் குழுக்களை மாவட்டம் தோறும் நியமிக்கத் தமிழக அரசு முன்வரவேண்டும் என்றும் பலர் தெரிவித்திருந்தனர். மேலும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து வெளியிட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றப்பட மேலும் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், உரிமையை பெறவும் குழந்தைகளுக்கான மாநில கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு துறைகள் சார்பாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதையடுத்து தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், உரிமையை பெறவும் குழந்தைகளுக்கான மாநில கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 1148 குழந்தைகளுக்கு நிதியுதவியும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் கருணை அடிப்படையில் 15 பேருக்கு பணி நியமன ஆணையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் தடய அறிவியல் துறை சார்பாக உருவாக்கப்பட்ட தடய மரபணு தேடல் மென்பொருளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் மாநிலங்களுக்கு இடையே செயல்படும் குற்றவாளிகளின் தொடர்பை கண்டறிதல், கரையோரம் ஒதுங்கும் அடையாளம் காண இயலாத உடல்கள் மற்றும் மனித எலும்புகளை மரபணு ஆய்வு மூலம் அடையாளம் காணுதல்,  தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள், இயற்கைப் பேரிடர்களால் உயிரிழந்த நபர்களை கண்டறிதல் போன்ற பணிகளை மிக எளிதாகவும் துரிதமாகவும் மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது. 

click me!