தமிழக முதல்வரை கண்டால் இயற்கைச் சீற்றங்களே மிரள்கிறது... தாறுமாறு பண்ணும் செல்லூர் ராஜூ!

Published : Aug 19, 2018, 11:06 AM ISTUpdated : Sep 09, 2018, 07:38 PM IST
தமிழக முதல்வரை கண்டால் இயற்கைச் சீற்றங்களே மிரள்கிறது... தாறுமாறு பண்ணும் செல்லூர் ராஜூ!

சுருக்கம்

தமிழக முதல்வர் பழனிச்சாமியைக் கண்டால் இயற்கைச் சீற்றங்களே அஞ்சுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தமிழக முதல்வர் பழனிச்சாமியைக் கண்டால் இயற்கைச் சீற்றங்களே அஞ்சுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர் பி உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

அப்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் முதல்வர், துணைமுதல்வர் மற்றும் அமைச்சர்களும் ஏன் பங்கேற்கவில்லை என சிலர் கேட்கின்றனர். அதையே நான் கேட்கிறேன் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஸ்டாலின் ஏன் பங்கேற்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

அவரைத் தொடர்ந்து அமைச்சர் உதயகுமார் பேசுகையில் ஜெயலலிதாவின் ஆன்மா எடப்பாடி பழனிச்சாமியின் உள்ளே புகுந்து பணியாற்றுகிறதோ? என்ற ஐயம் இருப்பதாக மூத்த அமைச்சர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். பிறகு தமிழக முதல்வரை கண்டு இயற்கை சீற்றங்களே பயப்படுகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!