டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி... - வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமரிடம் பேச முடிவு...!!!

Asianet News Tamil  
Published : May 23, 2017, 08:16 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி... - வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமரிடம் பேச முடிவு...!!!

சுருக்கம்

tamilnadu chief minister in delhi will be meet prime minister narendra modi at tomorrow

தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து பேச தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி சென்றுள்ளார். நாளை அவருக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், நதிநீர்களை இணைக்க வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறி தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் உறுதி அளித்திருந்தார்.

இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஒ.பி.எஸ் பிரதமர் மோடியை சந்தித்து விவசாயிகள் பிரச்சனைகளை எடுத்து கூறினார்.

மேலும் விவசாயிகள் சார்பில் அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் மோடியிடம் வழங்கினார்.

தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அவருக்கு நாளை பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கபட்டது.

பின்னர், எடப்பாடி இன்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். விமானம் மூலம் சென்ற எடப்பாடி நாளை காலை பிரதமர் மோடியை சந்தித்து தமிழக வளர்ச்சி திட்டங்கள், மற்றும் விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

கை கொடுக்காத 7 தொகுதிகள்..! காங்கிரஸுக்கு கல்தா கொடுக்கும் திமுக..! கதி கலங்க வைக்கும் சர்வே ரிப்போர்ட்..!
எடப்பாடியின் மாஸ்டர் மூவ்.! சீமானை எதிர்த்து போட்டியிடும் காளியம்மாள்.!? மார்பில் பாயும் வளர்த்த கடா!