பரபரப்பான சூழலில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!

By vinoth kumarFirst Published Jun 24, 2019, 11:15 AM IST
Highlights

தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டம் தொடங்கியது. 

தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டம் தொடங்கியது. 

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்க இருக்கிறது. இதில், துறை ரீதியிலான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். மேலும், புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள். 

இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 10 மணியளவில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில், துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நடைபெறும் மானியக் கோரிக்கையின்போது, துறை சார்ந்து எந்தெந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவது?, எவ்வளவு நிதி ஒதுக்குவது? என்பது குறித்தும், புதிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

மிகவும் முக்கியமாக தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, கடுமையான வறட்சி தொடர்பாக சட்டப்பேரவையில் மேற்கொள்ள வேண்டிய விவவாதம், நடவடிக்கை குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. 

click me!