எம்.எல்.ஏ.ககள் தகுதி நீக்க வழக்கு: அணுகுண்டா? புஸ்வாணமா? தமிழிசை பேட்டி

First Published Jun 14, 2018, 11:03 AM IST
Highlights
Tamilnadu BJP Leader Tamilisai Soundararajan Pressmeet


தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. பகல் 1 மணியளவில் தீர்ப்பு வெளியாகும் நிலையில் பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். 

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு தமிழக அரசியலில் அணுகுண்டாக வெடிக்கலாம் அல்லது புஷ்வாணமாக மாறலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகமே பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பது இன்று மதியம் 1 மணியளவில் வெளியாகவுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் 18 எம்.எல்.ஏக்களின் நிலை என்னவாகும் என்பது தான்.

உயர்நீதிமன்றம் தான் முடிவு செய்யவேண்டும். வழக்கின் முடிவு எப்படி வருகிறது என்று பார்ப்போம். அது அணுகுண்டாக வெடிக்கவும் செய்யலாம்,
இல்லையென்றால் புஸ்வாணமாக போகவும் செய்யலாம். அதனால் தமிழக அரசியலில் இது அணுகுண்டாக மாறப்போகிறதா? இல்லை புஸ்வாணமாக போகப்போகிறதா என்பதை நாம் ஒரு மணிக்கு தான் பார்க்க முடியும்.

மத்திய அரசை ராகுல் காந்தி எவ்வளவுதான் குறை கூறினாலும், தற்போது ஊழலற்ற ஆட்சி நடைபெறுகிறது. ஆனால், பா.சிதம்பரம் அவரது ஆட்சி காலத்தில்
அதிகாரத்தை பயன்படுத்தி அவரது மகன் ஊழல் செய்ய துணை போனவர் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

click me!