இந்த 11 நாட்கள் நமக்கு போர்க்களம்.. இதுதான் பாஜக பாயுற நேரம்..! மாஸ் காட்டிய அண்ணாமலை !!

Published : Feb 07, 2022, 09:16 AM IST
இந்த 11 நாட்கள் நமக்கு போர்க்களம்.. இதுதான் பாஜக பாயுற நேரம்..! மாஸ் காட்டிய அண்ணாமலை !!

சுருக்கம்

‘திமுகவில் வாரிசுகளுக்கு மட்டும்தான் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. திமுகவின் குடும்பக் ஆட்சி, கிராமம் முதல் கோபாலபுரம் வரை தொடர்கிறது. நமது கட்சி அப்படியல்ல’ என்று திமுகவை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. நேற்று சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சி போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மதுரவாயல் அடுத்த வானகரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, லோகநாதன் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய அண்ணாமலை, ‘பாஜக குறுகிய காலத்தில் அதிக வேகமாக வளர்ந்து வரும் கட்சியாகும். அடுத்த பதினொரு நாட்கள் போர்க்களம்போல் இருக்கும். அந்த அளவுக்கு போர்க்களத்தில் இருப்பதுபோல் முழுமூச்சாக பணியாற்ற வேண்டும்.கொரோனா காலத்தில் நாம் அதிகமாக மக்களுக்கு செய்துள்ளோம். 

நம்மைப்போல் எந்தக் கட்சியும் வேலை செய்யவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 450 பேருக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்களும் தலைவர்களும் உயிரிழந்துள்ளனர் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.இம்முறை நகராட்சி தேர்தலில் பாஜகவில் மிகத் திறமையானவர்களை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் கட்சி பாஜக. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் கிறிஸ்தவர், முஸ்லிம்கள் மதங்களைச் சேர்ந்தவர்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். 

பாஜக, மக்களை நேசிக்கும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.பாஜக சார்பில் போட்டியிட கட்சிக்குள்ளேயும் கடுமையான போட்டி இருந்தது. அடுத்த 11 நாட்கள் சென்னை தாம்பரம் ஆவடி மாநகராட்சியில் நிறையபேர் வெற்றி பெறுவார்கள். மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள். புதியவர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள். ஆகவே பாஜகவின் வெற்றி உறுதி. வேட்பாளர்களிடம் நான் சொல்லவிரும்பும் சில விஷயங்கள் இதோ, களத்துக்கு செல்லும்போது நமக்கு வரவேற்பு தயாராக உள்ளது. 

இன்றைய சூழலில் செல்போன் பவர்ஃபுல்லான கருவி. அதனை முழுமையாக பயன்படுத்துங்கள். போன் மூலம் வாக்காளரிடம் பேசுங்கள். நீங்கள் செய்துள்ள பணிகளை சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேருங்கள். பாஜகவின் செயல்பாடுகளையும், மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறுங்கள். திமுகவில் வாரிசுகளுக்கு மட்டும்தான் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. 

திமுகவின் குடும்பக் ஆட்சி, கிராமம் முதல் கோபாலபுரம் வரை தொடர்கிறது. நமது கட்சி அப்படியல்ல. நம் கட்சியின் முக்கியமான மூன்று நோக்கங்கள்,  `கட்சியை வளர்க்க வேண்டும், மக்கள் அளிக்கும் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும், நீங்கள் வெற்றி பெற வேண்டும்’. எப்போதும் இல்லாத அளவுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் 8 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அரசு எந்திரத்தை வைத்து நமது வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை நிராகரிக்க முயற்சித்தார்கள். அதை மீறி வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

 இதுவே நமக்கு கிடைத்த முதல் வெற்றி. என்றாவது ஒரு நாள் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். அதற்கு நாம் பல விஷயங்களை இழப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். அது பொருளாகவோ, நேரமாகவோ, நிம்மதியாகவோ கூட இருக்கலாம். வேட்பாளராக இருக்கும் நீங்கள், கட்சி தொண்டர்களின் பிம்பமாக இருக்கிறீர்கள்; கட்சியின் ஆன்மாவின் பிம்பமாக இருக்கிறீர்கள். தமிழகத்தில் ஒரு போலியான அரசியலை கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள். ஆனால் பாரதிய ஜனதா கட்சி புதுவிதமான அரசியலை கையில் எடுத்துள்ளது. அதற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. எட்டு மாதத்தில் திமுக சம்பாதித்த கெட்ட பெயர் 80 ஆண்டுகளுக்கு எந்த அரசியல் கட்சியும் சம்பாதிக்கவில்லை’ என்று பேசினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!