தென் சென்னையில் களமிறங்கும் தமிழச்சி... எதிர்த்து போட்டியிடப்போகும் தமிழிசை

By sathish kFirst Published Feb 27, 2019, 3:14 PM IST
Highlights

திமுக மகளிரணிப் பிரமுகருமான தமிழச்சி தங்கபாண்டியன் தென் சென்னை தொகுதிக்கான திமுக வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.  அவரை எதிர்த்து பிஜேபியின் தமிழக மாநிலத் தலைவர் என்பதால் தமிழிசை சென்னையிலேயே போட்டியிட உள்ளாராம்.

பிஜேபி - அதிமுக கூட்டணி அறிவிக்கப்படாதபோதே அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை தென் சென்னையில் போட்டியிடப் போவதாக தகவல்கள் கசிந்தன. இதை உணர்ந்த அமைச்சர் ஜெயக்குமாரோ தன் மகன் ஜெயவர்தனை மீண்டும் அதே தென் சென்னைக்கே நிற்கவைக்க உள்ளாராம். பிஜேபி கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையிலும் தென் சென்னையை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று எடப்பாடி, ஓபிஎஸ்ஸிடம்ஆகியோரிடம் உறுதியாக சொல்லியிருக்கிறார்  ஜெயக்குமார்.

ஆனால் பிஜேபியின் தமிழக மாநிலத் தலைவர் என்பதால் தமிழிசை சென்னையிலேயே போட்டியிட நினைக்கிறார்.  இந்த விஷயத்தை டெல்லி வரை வலியுறுத்தி வருகிறார் தமிழிசை. தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக தமிழிசையை நிறுத்தலாம் என்று பாஜகவில் சிலர் சொன்ன யோசனையை  ஏற்க மறுத்த தமிழிசை, தென் சென்னையில்  போட்டியிட்டால் மட்டுமே தனக்கு பாதுகாப்பு ஏன் நினைக்கிறாராம்.

அதேபோல, திமுக கூட்டணியைப் பொறுத்தவரை தென் சென்னை தொகுதிக்கு ஒரு பெண்ணை நிறுத்தலாம் என்று அக்கட்சித் தலைமை முடிவு செய்திருக்கிறது. அதன்படி கவிஞரும், பேராசிரியரும், திமுக மகளிரணிப் பிரமுகருமான தமிழச்சி தங்கபாண்டியன் தென் சென்னை தொகுதிக்கான திமுக வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. தென் சென்னை தொகுதியில் தமிழிசை நிற்கும் பட்சத்தில் தமிழச்சியிடம் தோற்பார் என சொல்கிறார்கள் திமுகவினர்.

click me!