
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
எங்கெல்லாம் கருப்பு பணம் இருக்கிறது என்று மத்திய அரசு சந்தேகம் கொள்கிறதோ அங்கெல்லாம் சோதனை நடைபெறுகிறது என்றும் சேகர் ரெட்டி மற்றும் ராம் மோகன் ராவ் வீடுகளில் நடந்த சோதனையில் கோடிக்கணக்கில் பணம்,மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது வருமனவரிதுறையின் இயல்பான நடவடிக்கை, இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டிற்கு இவ்வளவு போலீஸ் பாதுகாப்பு தேவையா என்ற கேள்விக்கு பதிலளித்த தமிழிசை முதலமைச்சர் இருக்கும்வரை இருந்த நிலை வேறு இப்போது இருக்கும் நிலை வேறு எனவே இவ்வளவு போலீசார் அங்கு பாதுகாப்புக்கு தேவையில்லை என்று தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு குறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர் மத்திய அரசு ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்த முழு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் விலங்கு நல ஆர்வலர்களே மத்திய அரசுக்கு எதிராக வாதங்களை எடுத்து வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.