மூன்று தொகுதிகளையும் ஒரு கை பார்ப்போம்... தமிழிசை தமாஷ் பேட்டி...

Asianet News Tamil  
Published : Oct 18, 2016, 08:26 AM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
மூன்று தொகுதிகளையும் ஒரு கை பார்ப்போம்... தமிழிசை தமாஷ் பேட்டி...

சுருக்கம்

அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் பாஜகா போட்டியிட்டு வெற்றி பெறும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடுவது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது அவர் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தேர்தலில் பாஜாக தனியாக களமிறங்கும் என கூறினார். மூன்று தொகுதிகளையும் பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும் என்றும் கூறினார். இதைக்கேட்டு உடன் இருந்த கட்சிக்காரர்களே தமிழிசையின் தைரியத்தையும் மனோ உறுதியயும் பார்த்து திகைத்து போயினர். தமிழிசையின் இந்த காமெடி பேட்டி குறித்து யாரும் அவ்வளவாக அலட்டி கொள்ளவில்லை.
காரணம் சமீப நாட்களாக தமிழிசை பேசுவது எல்லாம் காமெடியாக இருப்பதால் யாரும் அவர் சீரியசாக பேசுவதை பொருட்படுத்துவதில்லை.

 காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டபிறகும் கர்நாடக மாநில தேர்தலை கணக்கில் கொண்டு பாஜக அரசு அவர்களுக்கு ஆதரவான நிலையை எடுத்தது.
இதை நன்றாக தெரிந்தும் போகும் இடமெல்லாம் கண்டிப்பாக காவிரி தண்ணீர் வருமுங்க நம்புங்க , நான் சொல்றேன் நம்புங்க , நரேந்திர மோடி கண்டிப்பாக தமிழ்நாட்டுபக்கம் நிற்பார் என்றெல்லாம் பேசி காமெடி செய்து கொண்டிருக்கிறார். இதனால் அவரது பேச்சை யாரும் அவ்வளவு சீரியசாக எடுப்பதில்லை, அவரது கட்சிக்காரர்கள் உட்பட.

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!