
காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசின் துரோகத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கங்கள் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் 17 , 18 தேதிகளில் தொடர் மறியல் நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து இதற்காக ஆதரவு திரட்டும் முயற்சியில் அனைத்து கட்சிகளையும் விவசாயிகள் சங்கத்தினர் சென்று பார்த்தனர். விவசாயிகள் சங்கத்தினர் நடத்தும் ரயில் மறியலில் அனைத்து கட்சியினர் கலந்து கொள்வதாக அறிவித்திருந்தனர்.
இதில் பாஜக , அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனிடையே இன்று திமுக சார்பில் தோழமை கட்சிகளுடன் சேர்ந்து இன்று சென்னையில் மூன்று இடங்களில் ரயில் மறியல் நடத்தப்பட்டது.
பெரம்பூரில் சேகர்பாபு பொறுப்பில் நடந்த மறியலில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட திமுக தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலிம்ன் ஊர்வலமாக ரயில் மறியல் செய்ய வந்தார். பின்னர் பேரம்பூர் ரயில் நிலையத்தில் தடையை தாண்டி மு.க.ஸ்டாலின் , சேகர்பாபு, ரவிச்சந்திரன், ரங்கநாதன், பூங்கோதை ஆலடி அருணா , கிரிராஜன் உள்ளிட்டோருடன் கைதானார்.
பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் பல மண்டபங்களில் அடைத்தனர். மு.க.ஸ்டாலின் மற்றும் தொண்டர்களை ஓட்டேரியில் உள்ள ஒரு சொகுசு மண்டபத்தில் வைத்தனர். இந்த மண்டபம் முழ்தும் ஏசி வசதி செய்யப்பட்டதாகும்.
ரயில் மறியலில் ஈடுபட்டவர்கள் சாதாரணமாக சமூக நலக்கூடத்தில் , பெரிய மைதானத்தில் போலீசார் அடைத்து வைப்பார்கள். தனியார் மண்டபத்தில் பெரும்பாலும் அடைக்கமாட்டார்கள். அப்படியே அடைத்தாலும் ஏசி வசதி உள்ள மண்டபத்தை போலீசார் பிடிக்க மாட்டார்கள்.
அப்படி இருக்கும் போது இது எப்படி புது முறையாக இருக்கிறதே என்று விசாரித்தபோது கடந்த முறை எழும்பூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட போது தளபதியை சாதாரண சமூக நலக்கூடத்தில் அடைத்தனர். அதனால் ஏசி வசதி இல்லாமல் தளபதி தவித்து போய்விட்டார்.
அதனால் இந்த முறை போலீசாரிடம் திமுக மாவட்டம் பேசியதாகவும், கைது செய்தால் ஏசி மண்டபத்தில் வைக்க வேண்டும் அதற்கு உண்டான வாடகையை தருவதாக தெரிவித்ததாகவும் அதன் பேரில் போலீசார் ஏசி மண்டபத்தை பிடித்ததாகவும் கூறப்படுகிறது.