"உளறல் நாயகனாக மாறிய உலக நாயகன்"..! டைமிங்கில் ரைமிங்கா கமலை போட்டு தள்ளிய தமிழிசை...!

Published : May 14, 2019, 01:05 PM IST
"உளறல் நாயகனாக மாறிய உலக நாயகன்"..! டைமிங்கில் ரைமிங்கா கமலை போட்டு தள்ளிய தமிழிசை...!

சுருக்கம்

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து என கமல்ஹாசன் தெரிவித்துள்ளதற்கு நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது

உளறல் நாயகனாக மாறிய உலக நாயகன்..! டைமிங்கில் ரைமிங்கா கமலை போட்டு தள்ளிய தமிழிசை...! 

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து என கமல்ஹாசன் தெரிவித்துள்ளதற்கு நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து தங்களது கண்டனக் குரலை எழுப்பி வருகின்றனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் தொடர்ந்து தங்களது கண்டனத்தை பதிவு  செய்து வருகின்றனர் 

இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,

"உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது ஊழல் நாயகனாக மாறி வருகிறார். கமல்ஹாசன் இப்படிப் பேசுவதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் பாரதிய ஜனதா உங்கள் பேச்சை நிறுத்திவிடும். ஒருநாள் பேச்சிலேயே டார்ச் லைட் பீஸ் போய்விட்டது. கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு தடை செய்ய வேண்டும். அதே நேரத்தில் அவருடைய கட்சியின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். திமுக பிரச்சாரத்திற்கு கி. வீரமணி வந்தால் கிடைக்கக்கூடிய ஓட்டுகள் கூட கிடைக்காது.

திமுக தலைவர் ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். தேர்தல் முடிந்தவுடன் அரியணை ஏறி விடலாம் என நினைக்கிறார். தற்போது சந்திரசேகர ராவ் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தது...பாரதிய  ஜனதா கட்சிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவில் மூன்று மட்டுமல்ல எத்தனை அணிகள் வந்தாலும் பாரதிய ஜனதாவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!