
திமுக தலைவர் கருணாநிதிக்கு நடைபெறவுள்ள வைர விழாவில் பங்கேற்க அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், இவ்விழாவிற்கு பாஜக வை அவர் அழைக்காதது அவர் அரசியல் நாகரீகம் இல்லாதவர் என்பதையே காட்டுகிறது என குற்றம்சாட்டினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மணல் மாபியா சேகர் ரெட்டியிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக வருமான வரித்துறை அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் லிஸ்ட் ஒன்றை கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
அந்த பட்டியலில் உள்ள அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் மீது தமிழக அரசு ஏன் நடவடிக்கை என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது மு.க.ஸ்டாலின் கருணாநிதியை வைத்து குறுகிய அரசியல் நடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பாஜக மதவாத கட்சி என்று குற்றம்சாட்டும் ஸ்டாலின் ,வாஜ்பாயி தலையிலான ஆட்சியின் போது, பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்திருந்தபோது, மதவாத கட்சி என்று தெரியவில்லையா என கேள்வி எழுப்பினார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு நடைபெறவுள்ள வைர விழாவில் பங்கேற்க அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழிசை ,இவ்விழாவிற்கு பாஜக வை அவர் அழைக்காதது அவர் அரசியல் நாகரீகம் இல்லாதவர் என்பதையே காட்டுகிறது என குற்றம்சாட்டினார்.
கடந்த 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டுவந்து விட்டதாக தெரித்தார்