காலையில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்... மாலையில் பதவி பிரமாணம் செய்து வைத்தார்... தமிழிசையின் முதல் பணி!

By Asianet TamilFirst Published Sep 8, 2019, 10:23 PM IST
Highlights

அமைச்சரவையை விரிவுப்படுத்த முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த ஒரு வாரமாகவே திட்டமிட்டுவந்தார். ஆனால், புதிய ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்க இருந்ததால், அவர் பதவியேற்கும்வரை காத்திருந்தார். இந்நிலையில் இன்று காலை தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை பதவியேற்றுக்கொண்டார்.
 

தெலங்கானா மாநில ஆளுநராக இன்று காலை பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட தமிழிசை, மாலையில் 6 அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். முதல் பணியே அமைச்சரவை விரிவாக்கம் தமிழிசைக்கு அமைந்திருக்கிறது.
 தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சியில் இருந்துவருகிறது. சந்திரசேகர ராவ் தலைமையில் 12 பேர் அமைச்சர்களாக இருந்தனர். இந்நிலையில், அமைச்சரவையை விரிவுப்படுத்த முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த ஒரு வாரமாகவே திட்டமிட்டுவந்தார். ஆனால், புதிய ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்க இருந்ததால், அவர் பதவியேற்கும்வரை காத்திருந்தார். இந்நிலையில் இன்று காலை தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை பதவியேற்றுக்கொண்டார்.
இதையடுத்து மாலையில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. இரு பெண்கள் உள்பட 6 பேரை புதிய அமைச்சர்களாக நியமிக்க ஆளுநர் தமிழிசையிடம் முதல்வர் சந்திரசேகர ராவ் கடிதம் அளித்திருந்தார். ஐதராபாத்தில் உள்ள ராஜ் பவனில் மாலையில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதிய அமைச்சர்களுக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
காலையில் பதவியேற்ற உடனே, முதல் பணியாக தமிழிசைக்கு புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தது முதல் பணியாக அமைந்தது.

click me!