
தமிழகத்தில் தாமரை மொட்டு கூட விடக்கூடாது என தீவிரமாக இறங்கி தீயாய் வேலை செய்யும் திமுகவிற்கு,மொட்டு என்ன மொட்டு,தாமரை முழுமையாக மலர்ந்தே தீரும் என உறுதியாக களம் இறங்கி உள்ளார் தமிழிசை.
அதற்கு உதாரணமாக, தற்போது திமுக பொருளாளருக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழிசை. கடந்த 21 ஆம் தேதி சென்னையில் நடைப்பெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் மோடியை பற்றி கடும் விமர்சனத்தை முன் வைத்து இருந்தார் ஸ்டாலின்.
அதில் குறிப்பாக சிறுபான்மை மக்களை பெரும்பான்மை மக்களுக்கு எதிராக தூண்டி விட்டு ஸ்டாலின் குளிர்காய நினைக்கிறார். இதற்கிடையில் மோடி அரசுடன் கிறிஸ்துவ மக்கள் எங்கு இணக்கமாக இருந்து விடுவார்களோ என எண்ணும் ஸ்டாலின் மதவெறியை தூண்டி வன்முறைக்கு வழி வகுக்க காத்திருக்கிறார். மதவிஷமம் பரப்புவதா ஸ்டாலினுடைய மதச்சார்பின்மை கொள்கை என தாறுமாறாக கேள்வி எழுப்பி உள்ளார் தமிழிசை.
மேலும் மோடி அரசு என்ன விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதை என்னுடன் விவாதிக்க தயாரா..? என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார் தமிழிசை. இதற்கிடையில் கன்னியாகுமரியில் நடைப்பெற்ற ஒரு விழாவின்போது திமுக பொருளாளர் துரைமுருகன், கஜா புயல் பாதிப்பு பற்றி பிரதமர் மோடி ஒரு ஆறுதல் பதிவு கூட வெளியிடவில்லை என்று விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து ஆதாரத்தோடு விமர்சனம் செய்து உள்ளார் தமிழிசை. அதாவது, "திமுக பொருளாளர் துரைமுருகன் ஒரு தவறான தகவலை தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி வடமாநில தேர்தல் பரப்புரைக்கு நடுவே தமிழகத்திற்கு தேவையான அவசர உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து,வருத்தத்தையும் பதிவு செய்து இருந்தார். மேலும் அன்றைய தினமே (நவம்பர் 16-ஆம் தேதி )அவருடைய பதிவில் தமிழகத்தில் கஜாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிசாமி உடன் பேசியிருப்பதாகவும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு முன்வரும் என்றும் தெரிவித்திருந்தார்.மேலும் தமிழக மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி பிராத்திக்கிறேன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்ற பிரதமர் மோடியின் பதிவை சுட்டிக்காட்டி உள்ளார்.